சென்னை பல்கலைக்கழகத்தின் முன்பு புதிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தைச் சார்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய இந்திய மாணவர் சங்கத்தைச் சார்ந்த சந்துரு, "கல்விக்கொள்கை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் கல்விக் கொள்கை மீது கருத்துக்களைக் கூறுவதற்கு 30 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை குலக்கல்வி முறையை மீண்டும் அமல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்
மேலும், "புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு தமிழ் நாடு அரசு உறுதுணையாக இருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து சம்பவ இடம் விரைந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர்.