ETV Bharat / bharat

"புதிய வடிவில் அறிமுகமாகும் பான் கார்டு"-உங்களிடம் இப்போது உள்ள பான் கார்டு செல்லுமா? - PAN 2 0

உங்களிடம் ஏற்கனவே உள்ள நிரந்த கணக்கு எண்ணை ஒருங்கிணைந்த வகையில் பான் 2.0வின் படி தரம் உயர்த்தலாம். இதற்கான அரசின் ரூ.1435 கோடி திட்டத்தை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

பிரதிநித்துவ படம்
பிரதிநித்துவ படம் (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 4:16 PM IST

புதுடெல்லி: ஏற்கனவே உள்ள பான் 1.0 திட்டத்தை மறு சீரமைக்க ரூ.1435 கோடியில் மத்திய அரசு திட்டம் ஒன்று வகுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு கடந்த 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி பான் 2.0 திட்டமானது வரி செலுத்துவோர் பதிவு சேவைகளில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றம் செயல்படுத்தப்படுகிறது.

பான் 2.0 என்பது என்ன?: தற்போதைய பான் அட்டையில் இருந்து பான் 2.0 என்பது வித்தியாசமான ஒன்றா இல்லையா என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். நாம் அறிந்தவரை பான் அல்லது நிரந்தர கணக்கு என்பது 10 இலக்கங்களைக் கொண்டதாகும். இது வருமான வரித்துறையால் வழங்கப்பட்டதாகும். வரி செலுத்துதல், வரி பிடித்தம், வரி வசூல் வரவுகள், வருவாய் கணக்கு தாக்கல், குறிப்பிட்ட பரிமாற்றங்கள், தொடர்புகள் மற்றும் இது போன்ற ஒரு நபரின் அனைத்து பரிவர்த்தனைகளோடும் இந்த எண்ணை வருமான வரித்துறை இணைத்துள்ளது.

ஏற்கனவே உள்ள பான் அட்டையை தரம் உயர்த்தி, வரி செலுத்துவோருக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் மேலும் டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதே அரசின் நோக்கமாகும். ஏற்கனவே உள்ள உங்களுடைய நிரந்தர கணக்கு எண்ணை ஒருங்கிண்ந்த வகையில் பான் 2.0 ஆக தரம் உயர்த்தப்படும்.

புதிய பான் 2.0 முறை நடைமுறைக்கு வரும்போது அனைத்து அரசு முறைகளிலும், சீரான தன்மை மற்றும் இணக்கத்தை எளிதாக்குதல் என்ற வகையில் பான் என்பது பொதுவான அடையாளமாக டிஜிட்டல் தொடர்புகளைக் கொண்டிருக்கும். சேவைகளை எளிதாக்குவதற்கு அனைத்து அரசாங்க அமைப்புகளும் அடையாளம் கண்டு அதன்படி பயன்படுத்தும் ஒரு ஒத்திசைக்கப்பட்ட தரவுத்தளமாக இருக்கும். பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு முடிவின்படி முக்கியமான, முக்கியத்துவம் அல்லாத பான்/ டான் சேவைகளை ஒரேமாதிரியாக இணைப்பது , காகிதமில்லா தளமாக மாற்றுதல் அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இணைத்தல் என்பதை நோக்கமாக கொண்டு்ளது

உங்களிடம் உள்ள இப்போதைய பான் அட்டை செல்லுமா அல்லது க்யூ ஆர் குறியீட்டுடன் ஒரு புதிய பான் அட்டை வாங்க வேண்டுமா?: எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி புதிய க்யூ ஆர் குறியீட்டுடன் ஏற்கனவே உள்ள பான் அட்டையை தரம் உயர்த்திக் கொள்ளலாம். எனினும் இது கட்டாயம் அல்ல. ஏற்கனவே உள்ள பான் அட்டைகள் தொடர்ந்து செல்லுபடியாகும். இது குறித்து கடந்த திங்கள் கிழமையன்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மாணவிகளிடம் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆசிரியர் சான்றிதழ்கள் ரத்து! பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு..!

"பொதுமக்கள் புதிய பான் எண்கள் பெறுவதற்காக விண்ணப்பிக்க தேவையில்லை. தற்போது உள்ள பான் அட்டையின் செல்லுபடியாகும் காலம் பாதிக்கப்படாமல் அதன் செயல்முறையை விரிவாக்கம் செய்வது மட்டுமே தரம் உயர்ததுவதன் நோக்கம்," என்று அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின்படி தற்போதைய முறையை தரம் உயர்த்தி, காகிதமில்லாத முறையில் ஒருங்கிணைந்த இணையதளமாக உருவாக்கப்பட உள்ளது. இது ஒரு பொதுவான வணிக அடையாளமாக இதனை செயல்படுத்த முடியுமா என்பதற்கான வழிகளை நாங்கள் கண்டறிகின்றோம். அதன்படி ஒரு ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்படும். அது முழுவதுமாக காகிதமில்லாத வகையில் முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் இருக்கும். குறைகளை நிவர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படும்.

பான் 2.0வின் பலன்கள் மற்றும் அம்சங்கள்: அணுகல் எளிமை மற்றும் மேம்பட்ட தரத்துடன் விரைவான சேவை வழங்கல், உண்மையான மற்றும் தரவு நிலைத்தன்மைக்கான ஒற்றை ஆதாரமாக பயன்படுத்துதல், சூழலுக்கு ஏற்ற நடைமுறைகள், திறன் வாய்ந்த உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் மேம்பாடு.

பான் அட்டையை புரிந்து கொள்வோம்: வருமான வரித்துறையானது 78 கோடி பான் அட்டைகளை வழங்கியுள்ளது. அதில் 98 சதவிகிதம் பான் அட்டைகள் தனிநபர்களுக்கானது. பான் அட்டையில் அதற்கு உரியவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், ஆகியவை இடம் பெற்றிருக்கிறது.எனவே இது அடையாள அட்டை சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பான் அட்டையில் நான் ஆங்கில எழுத்துகளும், அதனைத்தொடர்ந்து மூன்று எண்களும், பினனர் ஒரு ஆங்கில எழுத்தும் இடம் பெறும். இதன் முக்கியத்துவம் குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. AFZPK7190K என ஒரு பான் அட்டை இருப்பதாக வைத்துக் கொண்டால், AFZ என்பது அகர வரிசைப்படியிலான பான் வழங்கும் வரிசை முறையாகும். நான்காவதாக இருக்கும் P என்ற எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் நிலையை குறிக்கிறது. P என்றால் தனிநபருக்கான பான் அட்டை என்பதும், F என்று இருந்தால் அது நிறுவனத்துக்கான பான் அட்டை என்பதும், C என்பது கம்பெனிக்கானது என்றும், H என்றால் இந்து பிரிக்கப்படாத குடும்பம் என்றும், A என்பது நபர்களின் கூட்டமைப்பு என்றும், T என்றால் அறக்கட்டளை என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. K என்பது பான் அட்டை வைத்திருப்பவரின் தந்தை அல்லது இணையரின் பெயரின் முதல் எழுத்தை குறிப்பதாகும். அதற்கு அடுத்ததாக வரும் எண்கள் வரிசை கிரமமாக தரப்படும் எண்களாகும். கடைசியில் உள்ள K என்பது அகர வரிசைப்படி சரிபார்பதற்கான சரிபார்ப்பு எண்ணாகும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.