ETV Bharat / state

'கிரண் பேடி தரம் தாழ்ந்து பேசி வருகிறார்..!' - நாராயணசாமி! - Puduchery CM Narayanasami

சென்னை: "தமிழ்நாட்டு மக்களை பற்றி கிரண் பேடி தரம் தாழ்ந்து பேசி வருகிறார்" என்று, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சாடியுள்ளார்.

கிரண் பேடி தரம் தாழ்ந்து பேசி வருகிறார் -புதுவை முதலமைச்சர் நாராயணசாமி!
author img

By

Published : Jul 3, 2019, 12:03 AM IST

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி சென்ற புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் மாநில முதலமைச்சர்களுடன் நானும் ராகுல்காந்தியை சந்தித்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக நினைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு ராகுல்காந்தி மட்டும் பொறுப்பு அல்ல. அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் தான் தோல்விக்கான பொறுப்பை நாங்களும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தேன்.

கிரண் பேடி தரம் தாழ்ந்து பேசி வருகிறார் -புதுவை முதலமைச்சர் நாராயணசாமி!

துணைநிலை ஆளுநரின் கிரண்பேடிக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. தமிழக மக்களை தரக் குறைவாகப் பேச என்ன அருகதை இருக்கிறது. தனக்கு விளம்பரம் வரவேண்டும் என்பதற்காக கிரண்பேடி தரம் தாழ்ந்து பேசுகிறார்" என்றார்.

Intro:புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமானநிலையத்தில் பேட்டி

Body:புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமானநிலையத்தில் பேட்டி

டெல்லியில் மத்திய பிரதேசம்,ராஜஸ்தான், சத்தீஸ்கர்,பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் நானும் ராகுல்காந்தியை சந்தித்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக நினைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்

கட்சித் தலைவராக ஏன் இருக்க வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துக் கூறினோம் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு ராகுல்காந்தி மட்டும் பொறுப்பு அல்ல அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் தான் தோல்விக்கான பொறுப்பை நாங்களும் ஏற்றுக் கொள்வதாக கூறினோம்

காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்த பட்டதால் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது தலைவராக இருந்து வழி நடத்த வேண்டும் என்று கூறினோம் ராகுல் காந்தி பொறுமையாக கேட்டுக் கொண்டார் ஆனால் எந்த பதிலும் சொல்லவில்லை ஒரு வாரத்திற்குள் மீண்டும் அழைத்துப் பேசுவார் என்று நம்புகிறோம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வாட்ஸ் அப்பில் தமிழக அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் தமிழக மக்கள் ஊழல்வாதிகள் என்றும் குடிநீர் பிரச்சினைக்கு காரணம் என புதுச்சேரி மாநிலத்தில் தண்ணீரை சேமித்து வைத்து இருப்பதாக பதிவிட்டு இருந்தார் துணைநிலை ஆளுநரின் கிரண்பேடி க்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது தமிழக மக்களை தரக் குறைவாகப் பேச என்ன அருகதை இருக்கிறது தமிழகத்தில் அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்று கூற அதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளார் இப்படி சம்பந்தப்படாத விஷயங்களில் தலையிட்டு தனக்கு விளம்பரம் வரவேண்டும் என்பதற்காக கிரண்பேடி தரம் தாழ்த்தி பேசுகிறார் துணைநிலை ஆளுநர் ஆக உள்ள புதுச்சேரி மாநிலத்தில் தொல்லை கொடுத்து வருகிறார் அந்த தொல்லைகளை சமாளிக்க ஒரு இடத்தில் ஒதுக்கி வைத்து உள்ளோம் ஆனால் தனது வாளை தமிழகத்தில் நீட்டுகிறார் துணைநிலை ஆளுநர் ஆக இருக்க தகுதி இல்லாதவர் என பேசுகிறோம் என்பதை தெரியாமல் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார் மற்றவர்களை பற்றி ஆதாரமில்லாமல் பேசுவதற்கு தமிழக மக்களை தரம் குறைவாக பேசுவதற்கு அருகதை கிடையாது என தெரிவித்தார்

திமுக தலைவர் ஸ்டாலின் துணைநிலை ஆளுநர் தமிழக மக்களை பற்றி பேச தகுதி கிடையாது என்பதை தெளிவாக பேசியுள்ளார் தமிழக அரசியல்வாதிகள் ஊழல் வாதிகள் என்று கூறியதை தமிழக சட்டமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ஸ்டாலின் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கி உள்ளனர்

துணைநிலை ஆளுநரின் நிர்வாக ரீதியாக பேசுவதற்கு தடை உள்ளது ஆனால் அவர் விதிமுறை மீறி செயல்பட்டால் அதை விமர்சனம் செய்ய அதிகாரம் உண்டு தமிழக சபாநாயகர்கள் சட்டமன்றத்தில் இது பற்றி விவாதம் நடத்த வேண்டும் துணைநிலை ஆளுநர் பற்றி பாராளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளோம் கிரண்பேடி சொன்ன தமிழக அரசியல்வாதிகள் ஊழல் வாதிகள் ஊழல்வாதிகள் என்பதை சட்டமன்றம் ஏற்றுக் கொள்கிறதா தமிழ் சமூகத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்தியுள்ளார் இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் புதுச்சேரி மக்கள் சார்பாக கிரன்பேடி செய்த தவறுக்கு மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

கிரண்பேடி தினமும் விளம்பரம் வரவேண்டும் என்பதற்காக எல்லாரையும் தரம் தாழ்த்தி பேசுகிறார் புதுச்சேரியில் தண்ணீரை அந்தந்த துறை மூலமாகத்தான் ஏரி குளங்களை அரசு பணத்தில் தூர்வாரப்பட்டு ஏரியை தூர்வார பட்டதை போய் இவர் பார்த்துவிட்டு பொய்யான தகவல்களை மக்களுக்கு தருகிறார் அவரது பொய்கள் விரைவில் அம்பலத்திற்கு வரும்

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தரமான நகரமாக கொண்டுவரப்படும் ரூபாய் 1750 கோடி திட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி செயல்படுத்தப்படவுள்ளது ரூபாய் 500 கோடி செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்த உள்ளது கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டமும் நிலத்தடி நீரையும் இணைத்து செயல்படுத்த உள்ளோம் பிரெஞ்சு அரசும் புதுச்சேரி அரசும் இணைந்து செய்கிறோம் இதனால் குடிநீர் பிரச்சனை இருக்காது மக்களுக்காக தாராளமாக தண்ணீர் கிடைக்கிறது தண்ணீர் பிரச்சினை இல்லை என தெரிவித்தார்

Conclusion:இவ்வாறு புதுவை முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.