ETV Bharat / state

பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரைக்கு எதிராக வழக்கு

சென்னை: சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி அவரது மனைவிக்காக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி அமமுக வேட்பாளர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உயர் நீதிமன்றம்
author img

By

Published : Apr 10, 2019, 1:04 PM IST

அமமுக சார்பில் ஓசூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி போட்டியிடுகிறார். இவர், சிறப்பு நீதிமன்றத்தால் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தகுதி இழப்பு செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவியாவார்.

உச்ச நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி தாக்கல் செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்காமல் தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி தனது மனைவிக்காக தொடர்ந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இது சட்ட விதிகளுக்கு மாறானது. அதனால் அவரது பரப்புரைக்கு தடைவிதிக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

Intro:Body:

சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி அவரது மனைவிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரி அமமுக வேட்பாளர் புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

தினகரனின் அமமுக ( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) சார்பில் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் வரும் 18 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக ஓசூர் சட்டமன்ற தொகுதியில் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி போட்டியிடுகிறார்.

இவர், சிறப்பு நீதிமன்றத்தால் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தகுதி இழப்பு செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவியாவார்.

உச்சநீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி

தாக்கல் செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி தனது மனைவிக்காக தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இது சட்ட விதிகளுக்கு மாறானது. அதனால் அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.