ETV Bharat / state

'வடசென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னையை சரி செய்வேன்' - மநீம வேட்பாளர் உறுதி!

சென்னை: "வடசென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னையை சரி செய்வேன்" என்று, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மவுரியா உறுதியளித்துள்ளார்.

மக்கள் நீதி மைய வேட்பாளர் மௌரியா
author img

By

Published : Mar 25, 2019, 7:42 PM IST

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் முன்னாள் காவல் துறை இயக்குனர் மவுரியா போட்டியிடுகிறார். அவர் இன்று வடசென்னை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யதர்ஷினியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மவுரியா கூறியதாவது,

வடசென்னையில் பல ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி உள்ளேன். இந்தப் பகுதி மக்களின் பிரச்னைகள் எனக்கு நன்கு தெரியும். அவற்றைத் தீர்ப்பேன் என்று உறுதி மொழியை அளித்து வாக்கு கேட்பேன். குடிநீர், போக்குவரத்து, மாணவர்கள், மகளிர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் என்னால் முடிந்த வரை தீர்த்து வைத்துள்ளேன். அதே முனைப்புடன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வடசென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது 1900ஆம் ஆண்டு, நான் பணியில் வந்ததுமுதல் இன்று வரை தீர்க்கப்படாமல் இருக்கிறது.

மக்கள் நீதி மைய வேட்பாளர் மௌரியா பேட்டி
குடிநீரில் எண்ணெய் கசிவுகள் கலப்பதும் ஆங்காங்கே தினசரி நடந்து கொண்டிருக்கிறது. காற்றில் அதிக அளவு மாசு படிந்து உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளது. இங்குள்ள குப்பைமேட்டில் ஏராளமான உயரத்திற்கு குப்பை கொட்டுவதால் அது நிலத்தடி நீரை மாசுபடுத்தி உள்ளது. எனவே அதனை அகற்ற வேண்டும். அதனை அகற்றி மற்றொரு இடத்தில் கொட்டி மாசுபடுத்தாமல் அதில் இருந்து மின்சாரம் தயார் செய்யவும் உரம் தயார் செய்யவும் என்னிடம் திட்டம் உள்ளது. மீனவர்களின் நலனுக்காக அவர்களின் வருமானத்தை மூன்று அல்லது நான்கு மடங்கு பெருக்குவேன். எங்களிடம் நீர் மாசுபடுதல், காற்று மாசுபடுதல் ஆகியவற்றை தடுப்பதற்கான திட்டம் உள்ளதை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம். எனவே மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள், என்றார்.

Intro:வடசென்னையில் 1900 ம் ஆண்டில் இருந்து
குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினை உள்ளது
மக்கள் நீதி மைய வேட்பாளர் மௌரியா பேட்டி

Body:சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் காவல் துறை இயக்குனர் மவுரியா வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யதர்ஷினியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் இரண்டு மனுக்களை அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கான உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் கட்சியின் வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் மவுரியா, வடசென்னையில் பல ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி உள்ளேன். இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகள் எனக்கு நன்கு தெரியும். எனவே அவற்றைத் தீர்ப்பேன் என்று உறுதி மொழியை அழித்து வாக்கு கேட்பேன்.
மற்றவர்கள் எதைச் செய்யப் போகிறார்கள், என்ன மாதிரியான விதிகளை கையாளப் போகிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. இந்தப் பகுதியில் நான் பல ஆண்டுகள் பணியில் இருந்து உள்ளேன். அந்த காலத்திலேயே மக்கள் பிரச்சினைகளை நேரடியாக சென்று தீர்த்து வைத்துள்ளேன்.
குடிநீர் ,போக்குவரத்து, மாணவர்கள் ,மகளிர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் என்னால் முடிந்த வரை தீர்த்து வைத்துள்ளேன்.
அதே முனைப்புடன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வடசென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது 1900ம் ஆண்டு நான் பணியில் வந்ததுமுதல் இன்று வரை தீர்க்கப்படாமல் இருக்கிறது. அதேபோல் குடிநீரில் எண்ணெய் கசிவுகள் கலப்பதும் ஆங்காங்கே தினசரி நடந்து கொண்டிருக்கிறது.
காற்றில் அதிக அளவு மாசு படிந்து உள்ளது. அதனைக் கட்டுப் படுத்த வேண்டி உள்ளது. நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளது. இங்குள்ள குப்பைமேட்டில் ஏராளமான உயரத்திற்கு குப்பை கொட்டுவதால் அது நிலத்தடி நீரை மாசுபடுத்தி உள்ளது. எனவே அதனை அகற்ற வேண்டும்.
அதனை அகற்றி மற்றோரிடத்தில் கொட்டி மாசுபடுத்தாமல் அதில் இருந்து மின்சாரம் தயார் செய்யவும் உரம் தயார் செய்யவும் தன்னிடம் திட்டம் உள்ளது. வெளிநாடுகளில் போக்குவரத்தினை சீர்செய்வதற்கு செயல்படுத்தும் திட்டங்களை போல் பல திட்டங்களை இங்கு கொண்டு வரவேண்டியுள்ளது. இங்குள்ள போக்குவரத்து நெரிசலை கண்டிப்பாக தீர்க்க முடியும்.
வடசென்னை பகுதியில் கல்வி சுகாதாரம் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் போல் அரசு பள்ளிகளை மாற்றி ஒரு குழந்தை கூட விடாமல் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. பணக்கார குழந்தைகளுக்கு கிடைக்கும் மருத்துவ வசதியும் இவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி உள்ளது.
பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியுள்ளது. மீனவர்களின் நலனுக்காக அவர்களின் வருமானத்தை மூன்று அல்லது நான்கு மடங்கு பெருக்கி அவர்களை மகிழ்ச்சிக் கடலில் வாழ்த்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எங்களிடம் நீர் மாசுபடுதல் காற்று மாசுபடுதல் ஆகியவற்றை தடுப்பதற்கான திட்டம் உள்ளதை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம்.
இந்தப் பகுதியில் நான் பணியாற்றியபோது மிகவும் நுணுக்கமாக ரவுடியிசத்தை ஒழிப்பது குறித்து ஆராய்ச்சி செய்தேன். நான் பணியாற்றிய பொழுது பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் பாதியில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வருவதால் பெற்றோர்கள் ஏற்காததால் அவர்கள் ரவுடிகளிடமும், தீயவர்கள் இடமும் அடைக்கலம் புகுந்தவை கண்டேன். அந்தக் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காக கணக்கெடுத்து சிறப்பு பாதுகாப்பு படையை உருவாக்கி, அவர்களுக்கு சீருடை வழங்கி, அவர்களை போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் காவல் நிலையத்தில் வரவேற்பறையில் அமரவைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வழங்கி நல்வழிப்படுத்தினோம்.
சுமார் 4000 இளைஞர்களை நல்வழிப் படுத்தி உள்ளேன். அதேபோல் சுகாதாரமற்ற முறையில் இருந்தவர்களையும் மருத்துவமனையில் கொண்டு சேர்த்து உள்ளோம். எனவே மக்கள் என்னை நன்கு தெரிந்து எனக்கு வாக்களிப்பார்கள்.
40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு என்னை நன்றாக தெரியும். தற்போது இளைஞர்களுக்கு நான் யார் என்பதை புரிய வைக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன் எனக் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.