திமுக தலைவர் ஸ்டாலின் மேடை பேச்சு
திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சென்னை சோளிங்கநல்லூர் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசுகையில், இது தேர்தல் பொதுக்கூட்டமா அல்லது சென்னை ஒருங்கிணைந்த மாநாடா என்று தெரியவில்லை. 40 நமதே நாடும் நமதே. நம் கையில் மாநில அரசு நாம் கை காட்டுவது மத்திய அரசு. சர்வாதிகார ஆட்சாயை நடத்திக் கொண்டிருக்கிற மோடியை வீட்டுக்கு அனுப்பக்கூடிய தேர்தல் இது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென் சென்னை வேநிறுத்தப்பட்டிருக்க அல்ல ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற தமிழச்சி தங்கபாண்டியனை பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்கு சேகரிக்க நான் உங்களிடம் வந்துள்ளேன்.
உதயசூரியன் சின்னத்தில் நிற்கக்கூடிய அனைவருமே கலைஞரின் பிள்ளைகள் தான்.
கவிஞர், எழுத்தாளர் என்று பல்வேறு வகையில் பன்முகத்தன்மை கொணேடவர் சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன்.
தமிழச்சி என்ற பெயரை கலைஞரை சூட்டினாலும் அந்த பெயர் வெளியே வந்ததா. 2007 ஆம் ஆண்டு நெல்லையில் நடந்த மாநாட்டில் தி.மு.க. வின் இரு வண்ண கொடியை தமிழச்சி தங்கபாண்டியன் ஏற்ற வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார் கலைஞர். மேலும் முரசொலி, கழக அறிக்கை என்று எல்லாவற்றிலும் அவர் பெயர் தமிழச்சி தங்கபாண்டியன் என்று குறிப்பிட வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார் தி.முக. தலைவர் கலைஞர்.
பள்ளிக் கல்வி துறை அமைச்சராக இருந்து சிறப்பான பணியை செய்தோம். அதில் குறிப்பாக கல்வி அனைவருக்கும் சமமானதாக வழங்க வேண்டும் என்கிற நோக்கில் சமச்சீர் கல்வி என்கிற அருமையான திட்டத்தை நிறைவேற்றினார் கலைஞர். அதில் பெரும் பங்கு வகித்தவர் தங்கம் தென்னரசு. எனவே தமிழச்சி தங்கபாண்டியன் கழக பணியை தொர்ந்து பணியாற்றும் குடும்பத்திலிருந்து வந்தவர்.
சென்னைக்கு வரும் போது தானாக ஒரு உணர்ச்சி வந்துவிடுகிறது. இதே மாநாகரத்தின் மேயராக ஒரு முறையல்ல இரண்டு முறை பணியாற்றி உள்ளேன். நிர்வாகம் என்றால் என்ன என்பதை இந்த சென்னை மாநாகரம் தான் உணர்த்தியது.
இதே தென் சென்னை தொகுதியில் தான் அண்ணா நின்று வெற்றிபெற்றார். அது போல் கலைஞரின் மனசாட்சி என்று சொல்லும் முரசொலி மாறன் இதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அதனால் மற்ற வேட்பாளர்களுக்கும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் இதான் வேறுபாடு. தென் சென்னை திமுகவின் கோட்டை ஆகும்.
இன்று காலையில் தான் தஞ்சையிலிருந்து வந்தேன். பல இடங்களால் பிரச்சாரம் செய்து வருகிறேன். ஆனால் இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும் போது சற்று ஆணவத்துடன், அகங்காரத்துடன் சொல்கிறேன் நாடும் நமதே நாற்பதும் நமதே.
நான் மேயராக இருந்த போது பத்து மாதத்தில் ஒன்பது பாலகங்களை கட்டி முடித்தோம்.
தனியார் பள்ளிகளோடு மாநகராட்சி பள்ளிகள் போட்டி போடுகின்ற அளவு உயர்த்திய மேயராக உங்களிடம் வாக்கு கேட்கின்றேன்.
மோடி சர்வாதிகாரி, எடப்பாடி உதவாக்கரை ஆவார். முதல்வர் எடப்பாடி தன்னை எம்.ஜி.ஆர் என்று நினைத்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்..இதில் மைக் வேறு இப்படி ( காலர் மைக்). பொல்லாத ஆட்சி அதற்கு பொள்ளாச்சியே சாட்சி
திமுக பனங்காட்டு நரி. எதற்கும் அஞ்சாது. நீதிமன்றம் சென்றால் பயப்புட மாட்டோம். கொடுனாடு பற்றி இனிமே ஒரு படி மேல் போய் பேசுவோம்.
பிரியாணி கடையில் நடந்த கைகலப்புக்கு அடுத்த நிமிடமே தண்டனை வழங்கினோம். இன்றுவரை கட்சியில் சேர்த்து கொள்ளவில்லை.
ஆனால் 7 வருடம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சேலத்தில் முதல்வர் ஊருக்கு அருகில் இரவில் பெண்களை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுப்பது, பணம் பறிப்பது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தான் உங்கழ் விருதா.
திருடன் கூட சொந்த வீட்டுல திருட மாட்டான். ஆனால் உங்களை உருவாக்கிய அம்மையார் கொடானாடு வீட்டில் கொல்லை அடித்து விட்டு உத்தமர் போல் நடக்கின்றனர்.
அதிமுக சார்பில் எங்காவது ஜெயலலிதாவிற்கு இரங்கல் கூட்டம் நடந்ததா?. அதிமுக தொண்டர்களுக்காக கேட்கின்றேன்.
ஒபிஸ் எப்போதும் குறை பிரசவம் தான். கொஞ்சம் நாள் முதல்வராக இருந்தார் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர்.
விவசாயிகளுக்கு உதவும் மன் புழு மண்ணிற்கு உள்ளே செல்லும். நீ செல்கிறாயா. ஜெயலலிதா காலில் கூட விழுந்து வணங்குவர் ஆனால் நீங்கள் தவளுகின்ரீர்கள்..
ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது. அவர் ஜெயலலிதா என்றால் நான் கேட்க மாட்டேன்..ஆனால் அவர் முதல்வராக மறைந்துள்ளார். ஒரு எதிர் கட்சி தலைவராக நான் கேட்பேன். இதை நான் சும்மா விட மாட்டேன். ஆட்சியில் அமர்ந்த உடேன் யார் காரணம் என்று கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுப்போம்.