ETV Bharat / state

ஊதிய பாக்கியை தரக்கோரி கஞ்சி காய்ச்சிய பஞ்சாலை தொழிலாளிகள்! - பஞ்சாலை

புதுச்சேரி: நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை உடனே வழங்ககோரி புதுச்சேரி அரசு பஞ்சாலை தொழிலாளிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாலை தொழிலாளிகள்
author img

By

Published : Mar 19, 2019, 5:34 PM IST

புதுச்சேரியில் உள்ள பாரதி, சுதேசி, ரோடியர் உள்ளிட்ட பஞ்சாலைகளில் 15 ஆயிரம் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது 600 க்கும் குறைவான தொழிலாளர்களே உள்ளனர். மேலும், ஆட்குறைப்பு, ஊதிய பாக்கி உள்ளிட்ட பல்வேறு நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக வழங்கப்படாத ஊதியம் மற்றும் 2018ம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு ஊதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுதேசி பஞ்சாலை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், புதுச்சேரி ஆளும் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான போட்டியினால் பஞ்சாலை தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்தாமல் உள்ளது எனக்கோரி முழக்கமிட்டனர். மேலும், கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Intro:மில் தொழிலாளர்கள் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வலியுறுத்தி மில் தொழிலாளிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர்

Body: புதுச்சேரியில் உள்ள பாரதி மில், சுதேசி மில், ரோடியர் மில் ,பஞ்சாலைகளில் 15 ஆயிரம் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதற்கிடையே மத்திய அரசின், மாநில அரசின் தவறான தொழில் கொள்கையாலும் ,பொருளாதார கொள்கையாலும், நிர்வாக ,சீர்கேடுகளால் ஆலைகள் படிப்படியாக நலிவடைய துவங்கியது இதனால் ஆட்குறைப்பு நடைபெற்றது தற்போது புதுச்சேரி உள்ள பஞ்சாலைகளில் 600 க்கும் குறைவான தொழிலாளர்கள் பணி செய்யும் நிலை உருவாகி உள்ளது. இதில் பாரதி ,சுதேசி மில்கள் படிப்படியாக ஆலையை மூடும் நிலையை உருவாகியது மேலும் ஆலையில் பணி புரிந்தவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பள பாக்கியும் 2018ம் ஆண்டுக்கான போனஸும் இதுவரை வழங்கப்படவில்லை என்று அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டத்தினை சுதேசி மில் வாயிற்பகுதியில் தொழிலாளர்கள் நடத்தினர் சங்கத் தலைவர் கோமதி அழகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மில் தொழிலாளர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர் மேலும் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் கவர்னருக்கும் இடையே உள்ள போட்டியினால் மில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தாமல் அரசு இருந்துள்ளதாக முழக்கமிட்டவர்கள் வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்

Conclusion:மில் தொழிலாளர்கள் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வலியுறுத்தி மில் தொழிலாளிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.