தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யோகப் பேட்டியில் சில முக்கிய அம்சங்கள்:
- இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தாண்டு முதல் திறன் அடிப்படையிலான பாடத்திட்டத்தினை அறிமுக செய்து, அதை அனைத்துக் கல்லூரிகளிலும் அமல்படுத்தப்படும்.
- இப்பாடத்திட்டம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். இந்த மாணவர்கள் 2020ஆம் ஆண்டு தேர்வெழுத வரும்போது, இப்பாடத்திட்டத்தின் முறையே தேர்வை நடத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.
- திறன் அடிப்படையிலான பாடத்திட்டத்தில் ஒரு பாடத்தினை படித்து முடித்தால் அவர்கள் அதனைச் செய்ய வேண்டும். எனவே புதியப் பாடத்திட்டத்தில் மூலம் இது சாத்தியப்படுமா? என்பதைப் பார்க்க வேண்டும்.
- முதலாம் ஆண்டில் மருத்துவ மாணவர்களாகச் சேர்ந்த உடன் 60 மணி நேரம் நோயாளிகளுடன் நேரடியாகப் பேசி அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வார்கள்.
- நோயாளியிடம் இது போன்ற வார்த்தைகள் தான் பயன்படுத்த வேண்டும். இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்பதும் இந்த பாடத்திட்டத்தில் வருகிறது.
- இந்த பாடத்திட்டத்தின் நோக்கம் ஒரு முழுமையான மருத்துவரை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும்.
- இப்பாடத்திட்டத்தில் இறந்தவரின் சடலம் இருந்தால் அதற்கு முன் சென்று அம்மாணவர்கள், உங்களால் நாங்கள் படிக்கிறோம் எனவும், உங்கள் உடலைத் தியாகமாக அளித்துள்ளீர்கள். அதனால் தான் படிக்கிறோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.
- இது புதியது ஒன்றுமல்ல. ஏற்கனவே நடைமுறையிலிருந்தது. ஆனால் பல மருத்துவக் கல்லூரி வரும்போது அது மாறிவிட்டது. எனவே சடலத்துடன் இருந்தும் கொள்கை ஆரம்பமாகிறது எனக் கூறினார்.