ETV Bharat / state

சுற்றுலாத் தலமாக மாறிவரும் பூங்கா ஏரி: பொதுமக்கள் மகிழ்ச்சி - boating

சென்னை: ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் நீர் அதிகமாக இருப்பதால், அதனருகில் அமைந்துள்ள ஏரியின் பூங்கா தற்போது சுற்றுலாத் தலமாக மாறிவருகிறது.

Lake turn as a picnic spot in Avadi
author img

By

Published : May 26, 2019, 9:39 AM IST

தமிழ்நாட்டில் போதிய மழையின்மையாலும், சுட்டெரிக்கும் வெயிலாலும் ஏரிகள் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில் 86 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் தண்ணீரைச் சேமித்துப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன் அவருடைய கோரிக்கையை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் சுற்றுச்சூழல் துறையின் மூலம் 28 கோடி பசுமை பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டது.

பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பொதுப்பணித்துறை மூலம் ஏரியை தூர்வாரி ஏரியைச் சுற்றி கரை அமைத்து மூன்று கிமீ தூரம் நடை பாதைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும் ஏரிக்கு உள்ளேயே பறவைகள் சரணாலயமும், படகு குழாம் அமைக்கும் பணிகளும் விறுவிறுவென நடைபெறும் நிலையில் இம்மாதம் பசுமை பூங்கா திறக்கப்பட உள்ளது.

ஆவடி பருதிப்பட்டு ஏரி பூங்கா

இக்கோடை விடுமுறையையொட்டி, ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 1000 பேர் இப்பூங்காவைச் சுற்றிப் பார்க்க வருகின்றனர். தற்போது சென்னை அருகே திருவள்ளூருக்கும் சேர்த்து, சென்னைக்கும் நடுவில் ஆவடியில் மிகப்பெரிய படகு குழாம், பறவைகள் சரணாலயம் எனச் சிறப்புகள் அமைக்கப்பட்டு வருவது, இப்பகுதி மக்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகக் கருதுகின்றனர்.

25.05.19
திருவள்ளூர்
ஆவடி_ஆ.கார்த்திக்

சென்னை ஆவடி பருதிப்பட்டுஏரி பசுமை பூங்கா சுற்றுலாதலமாக மாறிவருகிறது.

தமிழகத்தில் போதிய மழையின்மையாலும் சுட்டெரிக்கும் வெயிலாலும் ஏரிகள் குளங்கள் வற்றி காணப்படுகின்றன.இந்நிலையில் 86 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆவடி பருத்திபட்டு ஏரியில் தண்ணீரை சேமித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர்.கடந்த 2017 ஆம் ஆண்டு ஆவடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன் அவருடைய கோரிக்கையை அன்றைய தமிழக முதல்வர்  ஜெயலலிதா அவர்களால் சுற்றுச்சூழல் துறையின் மூலம் 28 கோடி பசுமை பூங்காவிக்காக  ஒதுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பொதுப்பணித்துறை மூலம் ஏரியை தூர் வாரி ஏரியை சுற்றி கரை அமைத்துக் மூன்று கிலோமீட்டர் தூரம் நடை பாதைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.மேலும் ஏரிக்கு உள்ளேயே பறவைகள் சரணாலயம் மற்றும் படகு குழாம் போன்ற பணிகள் விறுவிறுவென நடைபெறும் நிலையில் இந்த மாதம் ஆவடி பருத்திபட்டு பசுமை பூங்கா திறக்கப்பட உள்ளது.இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாட்டு திடல் உயர்கோபுர மின்விளக்கு என்று பல்நோக்கு சிந்தனையுடன் அமைக்க பட்டுள்ளது.இந்த ஒரு பசுமை பூங்கா ஆவடி தொகுதி மக்களுக்காக வெகுவிரைவில் அர்ப்பணிக்கப்பட உள்ளது. 29 கோடியே 5 லட்சம் செலவில் சுற்றுச்சூழல் துறை, பொதுபணி துறை மூலம்  இந்த பணி நடந்து முடிந்து விட்டது. இந்த பருதிப்பட்டு எரியில் அமைய உள்ள பசுமை பூங்கா அமைய காரணம் அமைச்சர் பாண்டியராஜன் அவர்களே சாரும். இந்த பூங்கா  இந்த  தேர்தல் முடிவு வந்தவுடன் திறக்கப்பட உள்ளது. இதைப்பற்றி இப்பகுதி மக்கள் கூறும் பொழுது மிகப்பெரிய ஒரு சுற்றுலா தளமாக மாறி வருவதை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்க்கிறோம்.இது விரைவில்  தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு ஒரு மிகப்பெரிய சுற்றுலா தளமாக அமையும் என எதிர்பார்கிறோம்.இதனை ஆவடி நகராட்சி நல்ல முறையில் மேம்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் சிறுவர்கள் முதியோர்கள் என்று அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த கோடை விடுமுறையை ஒட்டி மாத்திரம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1000 பேர் ஆயிரம் பேர் இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வருகின்றனர். மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஒரு சுற்றுலா தளம் என்று எடுத்துக்கொண்டால் கிண்டி,மெரினா,பழவேற்காடு, போன்ற ஒரு சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது.தற்போது சென்னை அருகே திருவள்ளுருக்கும் சென்னைக்கும் நடுவில் ஆவடியில் மிகப்பெரிய ஒரு படகு குழாம் ஒரு பறவைகள் சரணாலயம்    என சிறப்பான சுற்றுலா தலமாக  அமையப் பெற்றுள்ளது.இந்த பசுமை பூங்கா இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் என கூறலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.