ETV Bharat / state

EVM-ல் முறைகேடு செய்ய முடியுமா? - கோபால்சாமி சிறப்புப் பேட்டி! - Lok sabha election

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்பது நாள்களே உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

Former chief election commissioner special interview
author img

By

Published : Apr 9, 2019, 11:33 AM IST

Updated : Apr 9, 2019, 12:29 PM IST

கோபால்சாமி ஜூன் 2006 முதல் ஏப்ரல் 2009 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றியுள்ளார். பத்ம பூஷண் விருதும் பெற்றுள்ள இவரது பணிக்காலத்தின்போது மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நாடு முழுவதும் அனைத்து தேர்தல்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துவரும் நிலையில், கோபால்சாமி அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் மேலை நாடுகளில் அது பயன்படுத்தவில்லை என்ற பொய்யைக் கூறி வருகின்றனர். 'டி ஆர் எஸ்' எனப்படும் இந்தக் கருவி பல வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷின் பயன்படுத்தப்படுகிறது.

வெளிமாநிலத்தவர் 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது சரியானதல்ல. அதை தேர்தலுக்கு முன் வாக்காளர் அட்டை சரிபார்க்கும் அதிகாரிகள் கண்டறிய வேண்டும். அதற்கு வாக்களர்களும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை தடுக்க முடியும்.

100 விழுக்காடு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையமும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. சிலர் சில காரணங்களால் ஓட்டளிக்க முடியாமல் போகிறது. பெரும்பாலும் கிராமங்களைவிட நகர்ப்புறங்களில் இருப்பவர்களே வாக்களிப்பதில்லை. படித்தவர்கள் தங்களது வாக்கினை பயன்படுத்த வேண்டும், அதைக் கடமை என அவர்கள் நினைக்க வேண்டும் என தெரிவித்தார்.

நெருங்கும் மக்களவைத் தேர்தல்: முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி சிறப்பு பேட்டி!

சென்னை // வி.டி. விஜய் // சிறப்பு பேட்டி// முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி 

படித்தவர்கள் இனியாவது திருந்த வேண்டும் 

நகர்புறங்களிலேதான் வாக்கு பதிவு குறைவு  

 தற்போது தேர்தல் நேரம் என்பதால் பல்வேறு கேள்விகள் நம்  முன் எழுகின்றன. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேட்டில் ஈடுபடமுடியும் என்று எதிர் கட்சிகளும் நமது சந்தேகத்துக்கு உரு கொடுக்கும் வகையில் குற்றசாட்டை முன்வைத்து வருகிறது. இது போன்ற பல கேள்விகளுக்கு முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி பதிலளித்துள்ளார். இவர் ஜூன் 2006 முதல் ஏப்ரல் 2009 வரை தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றியுள்ளார். பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ள இவரது பணிக்காலத்தின்போது மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நாடு முழுவதும் அனைத்து தேர்தல்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னாள் ஆணையர் கோபால்சாமி நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டி: 

கடந்த காலத்தினை பார்த்தோமானால் தேர்தலில் தோற்றவர்கள் எல்லாம் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை குறை கூறி வருகின்றனர். மேலும் மேலை நாடுகளில் அது பயன்படுத்தவில்லை என்ற பொய்யை கூறி வருகின்றனர். 'டி ஆர் எஸ்' எனப்படும் இந்த கருவி பல இடங்களில் குறிப்பாக பிரேசில் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல அமெரிக்காவில் 'எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷின்' பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 2004ம் ஆண்டு தேர்தலின்போது இது உபயோகத்துக்கு வந்தது. இந்த இயந்திரத்தின் மீது பலருக்கு சந்தேகம் ஏற்பட்டு வழக்கு போட்டனர். பின்னர் சமீபகாலமாக ஒப்புகை சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு  கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏறக்குறைய 1500 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒரு ஒப்புகை சீட்டு இயந்திரத்தையும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தையும் வைத்து சோதனை செய்யப்பட்டதில் எவ்வித வித்தியாசமும் இல்லை. அதனால் கருவி நன்றாக செயல்படுகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் தோற்றவர்கள் அதே பல்லவியை பாடுகின்றனர். ஜெயித்தவர்கள் வெற்றியை கொண்டாடுவர். தோற்றவர்கள் ஜெயிக்கும்போது அது பற்றி பேசமாட்டார்கள். 

இதற்கு உதாரணம் 2001ல் தமிழகத்தில் நடந்த தேர்தலில் இந்த கருவியை உபயோகிக்க கூடாது என அப்போது எதிர்க்கட்சியில் இருந்தவர் (ஜெயலலிதா) சுப்ரீம்கோர்ட் வரை சென்றார். ஆனால்  தேர்தலில் அவரே வெற்றி பெற்றதும் இதுகுறித்து பேசுவதை நிறுத்தி விட்டார். இதேபோல் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு பஞ்சாபில் நடந்த தேர்தலில் அமரீந்தர் சிங் வெற்றிபெற்றார். இதனால் ஆம் ஆத்மீ கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்துவிட்டனர் என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து மாநில முதல்வர அமரீந்தர் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர், தில்லு முள்ளு செய்திருந்தால் நான் எப்படி ஜெயித்திருக்க முடியும் என்றார். எனவே மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் தவறு செய்ய முடியாது என்பது திண்ணம். 'விவிபேட்' முறை கடந்த பல தேர்தல்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித குறையும் ஏற்பட்டதில்லை. 

வெளிமாநிலத்தவர் 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது சரியானதல்ல. ஒருவர் புதிதாக வாக்காளராக தன்னை பதிவு செய்யும்போது அவரது பழைய இருப்பிடம் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்புவார்கள். அதை கூற மறுத்தால் அதிகாரிகள் அந்த பதிவை நீக்கி விடுவார்கள். ஆனால் தற்போது அதுபோல இல்லாமல் தேர்தல் ஆணைய உத்தரவின்படி புதிய இடத்தில் வாக்காளராக பதிவு செய்யப்படுகிறது. ஆனால் பழைய இடத்தில்  இவரது பதிவு நீக்கப்படாததால்தான் இது போன்று இரண்டு இடங்களில் வாக்கு என்ற நிலை ஏற்படுகிறது.  இது பரவலாக தான் இருக்கிறது. 

ஆதார் கார்டு  - வாக்காளர் அட்டை இணைப்புக்கு சட்டத்தில் திருத்தம் அல்லது கோர்ட் மூலம் புதிய சட்டம் இயற்ற தேர்தல் ஆணையம் முயற்சிக்கும் என்று நினைக்கிறேன். வேலூரில் பணம் பறிமுதல் நடந்தது குறித்து எனக்கு சரியாக தெரியாது. ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர் ஆணையம்  நடவடிக்கை எடுக்கும்.  

100 சதவீத வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையமும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. சிலர் சில காரணங்களால் ஓட்டளிக்க முடியாமல் போகிறது. பெரும்பாலும்  கிராமங்களைவிட நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் வாக்களிப்பதில்லை. படித்தவர்கள் தங்களது வாக்கினை பயன்படுத்த வேண்டும், அதை கடமை என அவர்கள் நினைக்க வேண்டும். 

வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதை உடனே தடுத்து நிறுத்த முடியாது. ஓரளவுக்கு கட்டுப்படுத்த கூடும். ஆனால் இதற்கு மக்களும் பணம் வாங்காமல் ஓட்டளிக்க வேண்டும் என நினைக்க வேண்டும். அவர்களும் எதிர்பார்க்கிறார்கள், அரசியல் கட்சிகளும் அளிக்கின்றன. இவ்வாறு கொடுத்ததும் எதிர்பார்த்தும் பழகியதால் இதை நிறுத்த முடியவில்லை. இரு பக்கங்களிலும் முடிவு செய்தால் மட்டுமே இதை தடுக்க முடியும். 

வெளிநாட்டில் வாழ்பவர்கள் குறைந்த சதவீதத்தினரே. அவர்கள் ஓட்டளிக்காததால் 100 சதவீத வாக்கு பதிவு குறைகிறது என்பது முற்றிலும் தவறு. இங்கே இருப்பவர்களே ஒட்டு போடுவதில்லை. தமிழகத்தில் பரவலாக கிராமப்புறங்களில் ஏறக்குறைய 75 - 85  சதவீதம் வரையும், நகர்ப்புறங்களில் 60 - 65 வரை மட்டுமே வாக்கு பதிவு எட்டப்படுகிறது. படித்தவர்களும் திருந்த வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது என்று குற்றம் சாட்ட எந்த எதிர்க்கட்சியும் தவறுவதில்லை. தேர்தல் சமயங்களில் இது ஒரு பழக்கம். தேர்தல் முடிந்த பின்பு தேர்தல் ஆணையம் தேர்தல் வழக்குகளை காவல் துறையிடம் ஒப்படைக்கும். மேலும் கோர்ட்டில் வழக்குகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை பொறுத்து இந்த வழக்குகள் தாமதமாகும். என்கிறார்.        

visual are sent by reporter app. 

--
V.T. VIJAY,
Reporter/ Content Editor,
E TV bharat,
chennai.
+91 9629185442

Last Updated : Apr 9, 2019, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.