ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சேர எப்போது வரை விண்ணப்பிக்கலாம்? - Engineering counciling

சென்னை: பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவரும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநருமான விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

Engineering counciling end on May 31
author img

By

Published : May 2, 2019, 1:46 PM IST

பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியது.

இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவரும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநருமான விவேகானந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு மே 31ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் பொறுமையாக விண்ணப்பிக்கலாம்' எனக் கூறினார்.

பொறியியல் படிப்பில் சேர மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

மேலும் ஜூன் மாதம் 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 42 பொறியியல் உதவி சேர்க்கை மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். ஜூன் மாதம் 17ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Intro:பிஇ பிடெக் பொறியியல் படிப்பில் சேர
ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது
ஜூலை முதல் வாரம் பொதுப் பிரிவு கலந்தாய்வு

Body:சென்னை, பி இ,பி டெக், படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது எனவும் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தலைவரும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குனருமான விவேகானந்தன் தெரிவித்தார்.
பி இ பி டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் இரவு 12 மணி முதல் துவக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை 9 மணி வரை 750 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தலைவரும், தொழில்நுட்ப கல்வி இயக்குனருமான விவேகானந்தன் செய்தியாளரிடம் கூறியதாவது, பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இரவு முதல் துவக்கப்பட்டு காலை 9 மணி வரை 750 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 350 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர். மே 31ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் உள்ளது. எனவே மாணவர்கள் பொறுமையாக விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 42 தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்களிலும் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் அங்கு நேரில் சென்றோ அல்லது வீட்டில் இருந்தோ விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்க வைத்திடும் கூடுதலாக ஒரு சேவை மையத்தினை துவக்க உள்ளோம்.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும். ஜூன் மாதம் மூன்றாம் தேதி ரேண்டம் எண் வழங்கப்படும். ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள 42 தமிழ்நாடு பொறியியல் உதவி சேர்க்கை மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். ஜூன் மாதம் 17ஆம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும்.
ஜூலை மாதம் முதல் வாரத்தில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் 26ம் தேதி முதல் 23ம் தேதி வரை நேரடியாக சென்னையில் நடைபெறும்.
மாணவர்கள் தங்களின் இமெயில் ஐடி, செல்போனின் விலை சரியாக பதிவு செய்ய வேண்டும். தகவல்கள் அனைத்தும் அதன் மூலமே மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.