நாட்டின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிமே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ஆம் தேதி 40 நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.
தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர்சுனில் அரோரா , தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா மற்றும், சுஷில் சந்திரா உள்ளிட்டோர் சென்னை வந்தனர்.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.