ETV Bharat / state

‘நான் களமாடியிருந்தா, இந்தியா ஜெயிச்சிருக்கும்!’ - அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அரையிறுதிப் போட்டியில் நான் விளையாடியிருந்தால் இந்தியா வென்றிருக்கும் என நகைப்புடன் தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாள்
author img

By

Published : Jul 11, 2019, 1:33 PM IST

Updated : Jul 11, 2019, 3:05 PM IST

சென்னை எழும்பூரில் உள்ள இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு, அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்தியாவிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் என்று கூறினார். மேலும், நீட் தொடர்பான கேள்விக்கு, நீட் விவகாரத்தில் தூங்குவது போல நடிக்கும் திமுகவை எழுப்ப முடியாது என்றும், நீட் தேர்விற்குக் காரணமே திமுக, காங்கிரஸ் தான் என்றும் கூறினார். தொடர்ந்து பேசியவர், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமைகள் தாரை வார்க்கப்பட்டது என்றும், இழந்த உரிமைகளை அதிமுக அரசு மீட்டு வருகிறது எனவும் கூறினார். அதுமட்டுமின்றி டெல்லிக்கு பாதபூசை செய்து குடும்பத்திற்காகப் பதவியைப் பெற்றது திமுக என்றும் குற்றஞ்சாட்டினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள்

அதேபோல், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான் விளையாடி இருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்குப் பின்னடைவு ஏற்பட்டது போல இந்திய அணிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியும், அதிமுகவும் தோல்வியிலிருந்து மீண்டு வரும். இந்தியாவும் வெற்றி பெறும், அதேபோல் அதிமுகவும் வெற்றி பெற்று நிலைத்திருக்கும் என்றார்.

இடையில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறும்போது, அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் கழிவறைகள் உரிய முறையில் பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. திமுக ஆட்சியில் கொண்டு வந்ததால் அதிமுக சரியாகப் பராமரிக்கவில்லையா என்ற கேள்விக்கு, திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்பதால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பராமரிப்பதில் பாரபட்சம் காட்டவில்லை என்று கூறினார். மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறதென்றும் அவர் தெரிவித்தார்.

வீரன் அழகுமுத்துக்கோனின் 262ஆவது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூரில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த ராஜகண்ணப்பன் கூறுகையில், அதிமுகவில் ஒரு தலைமை இருந்தால் தான் தான் அந்தக்கட்சி நிலைக்கும். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்போம். அதிமுகவில் எதுவும் சரியில்லை என்பதால், திமுகவுடன் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்துள்ளோம் என்றார்.

Intro:

Body:tn_che_02_deputy_cm_honoring__visual_7204894

Conclusion:
Last Updated : Jul 11, 2019, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.