ETV Bharat / state

மத்திய மாநில அரசின் கைப்பாவை தேர்தல் ஆணையம் - இ.கம்யூ கண்டன அறிக்கை

சென்னை: மத்திய மாநில அரசுகளின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் தேர்தலை நேர்மையாக நடத்திட  முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

author img

By

Published : Apr 16, 2019, 11:43 PM IST

cpi

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஆளும் அதிமுக தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு காவல்துறை உதவியுடன் பணப்பட்டுவாடா செய்து வருகிறது. பல இடங்களில் ஆளும் கட்சியினரிடமிருத்து கோடிக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாஜக நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகிறது. பல மாநிலங்களில் பாஜகவினரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் பயணிக்கும் ஹெலிகாப்டர் மூலம் மர்ம பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை குறித்த புகார்களுக்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. பாஜகவிற்கும், தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக கூட்டணிக்கும் சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. ஆளும் கட்சி கூட்டணியின் அட்டுழியங்களை வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம், வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்திருப்பது அப்பட்டமான பாரபட்சமான போக்காகும்.

திமுக தலைமையிலான ,மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். நேர்மையாக, நடுநிலையுடன் தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், மத்திய மாநில அரசுகளின் கைப்பாவையாக செயல்படுவது கண்டனத்திற்குரியது. தேர்தலை நேர்மையாக நடத்திட முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தில் ஆளும் அ.இ.அ.தி்மு.க தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு காவல் துறை உதவியுடன் பணப் பட்டுவாடா செய்து வருகிறது. பல இடங்களில் ஆளும் கட்சியினரிடமிருத்து  கோடிக்கணக்கான ரூபாய்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

பா.ஜ.க நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகிறது. பல மாநிலங்களில் பா.ஜ.கவினரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் பயணிக்கும் ஹெலிகாப்டர் மூலம் மர்மப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இவை குறித்த புகார்களுக்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. பா.ஜ.க விற்கும் ,தமிழகத்தில் ஆளும் அ.இ.அ.தி.மு.க  கூட்டணிக்கும் சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.

ஆளும் கட்சி கூட்டணியின் அட்டூழியங்களை வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம், வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்திருப்பது அப்பட்டமான பாரபட்ச போக்காகும். ஜனநாயகப் படுகொலையாகும்.

தி.மு.க தலைமையிலான ,மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

நேர்மையாக ,நடுநிலையுடன் தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் ,மத்திய மாநில அரசுகளின் கைப்பாவையாக செயல்படுவது கண்டனத்திற்குரியது.

தேர்தலை நேர்மையாக நடத்திட  முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.