ETV Bharat / state

சென்னையில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கண்காட்சி! - tech

சென்னை: பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கண்காட்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

anna
author img

By

Published : Feb 8, 2019, 6:07 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் 65 புதிய கண்டுபிடிப்புகளை தேசிய அளவிலான கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர். இதை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தொடங்கி வைத்தார். இதில் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு சூரிய மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் நவீன இயந்திரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் தாமரைச்செல்வி, இந்த கண்காட்சி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரவும், அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

Intro:சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கண்காட்சி

Body:சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப் படுத்தும் வகையில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்று வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் 65 புதிய கண்டுபிடிப்புகளை தேசிய அளவிலான கண்காட்சி காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த கண்காட்சி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா துவக்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு சூரிய மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள் விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் நவீன இயந்திரங்களை கண்டுபிடித்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் தாமரைச்செல்வி கூறியதாவது, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கண்டுபிடிப்புகளை ஆன்லைனில் பதிவு செய்தனர். அவற்றில் 65 கண்டுபிடிப்புகளை இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர். இவற்றில் சிறந்த மூன்று கண்டுபிடிப்புகள் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த கண்காட்சி அழகு மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரவும் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில் சோலார் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் சைக்கிளையும் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இந்த சைக்கிளில் 15 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். மேலும் கூடுதலாக செல்ல வேண்டும் என்றால் தன்னுடைய திறனை அதிகரிக்க வேண்டும் என கூறினர். தற்போது இதனை அடுத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பிரசன்னா தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.