அமமுக சார்பில் இன்று இரண்டு மனுக்கள் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூவிடம் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் முஸ்தபா அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்.,
நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், இதன் மூலம் வாக்கு விழுக்காட்டை அதிகரிக்க முடியும் என்று கூறினார்.
மேலும், அமமுக வேட்பாளர்கள் மீது ஓசூர், சென்னை, ஆரணித் தொகுதிகளில் தாக்குதல் நடத்திய அதிமுகவினரைக் கைது செய்ய வேண்டும் என அமமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.