ETV Bharat / state

பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை - AICTE chairman

சென்னை: பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் அணில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் அணில் சகஸ்ரபுத்தே
author img

By

Published : Mar 24, 2019, 5:10 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சந்திரசேகரன் எழுதிய மாடன் சயின்டிஃபிக் தாட் (Modern Scientific Thought) என்ற புத்தகத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைவர் அணில் சகஸ்ரபுத்தே வெளியிட அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா, மூத்த கல்வியாளரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான அனந்தகிருஷ்ணன், ஐஐடி மெட்ராஸ் முன்னாள் இயக்குநர் ஆனந்த் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் அணில் சகஸ்ரபுத்தே, பொறியியல் படிப்பில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்த ஆண்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றம், விரிவுரையாளர்களுக்கான பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

புத்தக வெளியீட்டு விழாவில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் அணில் சகஸ்ரபுத்தே
பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஓய்வு பெற்ற பேராசிரியர்களை கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அணில் சகஸ்ரபுத்தே, அதற்குரிய செலவுகளையும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமே அளிப்பதாக கூறினார். தற்பொழுது 200 ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர் இதனால் பொறியியல் கல்லூரிகளின் தரம் வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு வருவதை குறிப்பிட்ட அணில் சகஸ்ரபுத்தே, மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையானது ஓரளவு நிலையாக உள்ளதாகவும், வருங்காலத்தில் இது மேலும் குறையும் எனவும் தெரிவித்தார்.

Intro:பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பருவத்தேர்வு முடிந்தப் பின்னர் மாறுங்கள்
ஏஐசிடிஇ தலைவர் அனில்சகஸ்ரபுத்தே வேண்டுகோள்

Body:சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சந்திரசேகரன் எழுதிய மாடன் சயின்டிபிக் தாட் என்ற புத்தகத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் அணில் சகஸ்ரபுத்தே வெளியிட அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா, மூத்த கல்வியாளரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான அனந்தகிருஷ்ணன், ஐஐடி மெட்ராஸ் முன்னாள் இயக்குநர் ஆனந்த் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் அணில் சகஸ்ரபுத்தே, பொறியியல் படிப்பில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சுமார் 100க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் அனுமதி பெறுவதற்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர்தான் விபரங்கள் தெரியவரும்.
பொறியியல் கல்லூரிகள் இருபது அல்லது 15 ஏக்கர் பரப்பளவு இருந்தால் அந்த வளாகத்தில் கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரி, தொழிற்கல்வி போன்றவற்றை துவக்கிக் கொள்ள எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் அதே நேரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் துவக்குவதற்கு ஆட்சேபனை மட்டும்தான் தெரிவிக்கவில்லை. முறைப்படி அங்கீகாரம் பெறுவதற்கு உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு அனுமதி அளிக்கப்படும். கலை மற்றும் பொறியியல் கல்லூரி ஆகியவற்றை தனித்தனியே பிரித்துக் காட்டும் வகையில் சுற்றுசுவர் அமைக்கப்பட வேண்டும்.
பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையிலும் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடத்திட்டம் மாற்றம், விரிவுரையாளர்களுக்கான பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படுகின்றன.
பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஓய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் செல்வதற்குரிய செலவுகளையும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அளிக்கிறது. தற்பொழுது 200 ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பொறியியல் கல்லூரிகளின் தரம் வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும்.
பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையானது ஏற்கனவே ஓரளவு நிலையாக உள்ளது. இந்த எண்ணிக்கை சற்று மாறுபடும். சுமார் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறையும்.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உண்மை சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் சான்றிதழ்களை பெற்று பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி உண்மை தன்மை முடிவுற்ற பின்னர் திருப்பி அளிக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் விரிவுரையாளர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அவர்களுக்கு வேறுகல்லூரியில் அதிக சம்பளத்தில் பணி கிடைத்தால் மாறி செல்லலாம். ஆனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த பருவத்திற்கான பாடங்கள் முடித்த பின்னர் மாறி செல்லுங்கள்.
சுயநிதி பல்கலைகழகங்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அனுமதியை பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சில சுயநிதி பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்து அனுமதி பெற்றனர். இந்தாண்டு அனைத்து சுயநிதி பல்கலைக்கழகங்களும் விண்ணப்பித்து கட்டாயம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அவர்கள் மாணவர் சேர்க்கை நடைமுறையில் நாங்கள் தலையிட மாட்டோம். அதே நேரத்தில் எத்தனை மாணவர்களை எந்த பிரிவை சேர்ந்தார்கள் என்பது குறித்து விபரத்தினை தெரிவிக்க வேண்டும். அதற்கு அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். ஏற்கனவே எவ்வளவு மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட படிப்பார்கள் என்ற விபரம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சுயநிதி பல்கலைக்கழகம் குறித்து இருக்காது. தற்போது அந்த விபரங்கள் முழுவதும் பெறப்படும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.