அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள வள்ளலார் கோயில் தெருவில் மழை நீா் தேங்குவதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர். இந்த சாலை சுமார் 18 வருடங்களுக்கு முன்பு சிமெண்டால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் இந்த சிமெண்ட் சாலையில் சாலை முழுவதும் மழைநீர் நிரம்பி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இங்கு வீட்டினுள் மழை நீர் புகுந்து வீடுகள் சேதமாகும் சூழ்நிலையில் உள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!