அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சித் தலைவருக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்தில் போட்டியிட்ட அபிநயா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் மகாராணி, வாக்கு எண்ணிக்கையில் அதிகளவில் குளறுபடி நடந்ததாகவும் வாக்குச்சீட்டில் 13 சீட்டுகளை காணவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி கிராம மக்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்தார்.
இதையும் படிங்க: