அரியலூர் மாவட்டம் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 23 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 288 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தையும், அரியலூர் நகராட்சி பகுதிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 30 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்தையும், ஜெயங்கொண்டத்தில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நகராட்சி அலுவலக கட்டடத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பின்னர், திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இவருடன் மாவட்ட ஆட்சியர் ரத்னா கலந்துகொண்டார்.
அப்போது கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், "அரியலூர் நகராட்சி பகுதியில் வீடுகள், பொது இடங்கள், பாதாள சாக்கடைகள் மூலம் கழிவுநீர் எடுக்கப்பட்டு அதை சுத்திகரிப்பு செய்து விவசாயம், சமூக காடுகள் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக அரசு இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது - ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்!