ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - காலை செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top ten news at 9 am  top ten  top news  top ten news  latest news  tamil nadu news  tamilnadu latest news  news update  today news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  காலை செய்திகள்  ஒன்பது மணி செய்திகள்
செய்தி சுருக்கம்
author img

By

Published : Nov 11, 2021, 9:27 AM IST

1. கனமழை எதிரொலி: 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2. சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை - அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் ..

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடியக் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழைநீர் கடல் போல் தேங்கியுள்ளது.

3. கனமழை எச்சரிக்கை: மக்களுக்குத் தேவையான உணவு தயார் - கே.என். நேரு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவுகளை தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

4. காவல் நிலையங்களில் கோவில்கள் அகற்ற கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிலைகள், கோவில்களை அகற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

5. அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அகற்றப்பட்ட புகைப்படங்களை மீண்டும் வைக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

6. ஸ்மார்ட் சிட்டி முறைகேடு விசாரணையில் தெரிந்துவிடும் - அமைச்சர் கே.என்.நேரு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு இல்லை என்று கூறும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விசாரணை ஆணையம் அமைத்தவுடன் தெரிந்துவிடும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

7. நடைபாதையில் கிடக்கும் பால் பாக்கெட்டுகள் - ஆவின் நிறுவனத்தின் நிர்வாகச் சீர்கேடுதான் காரணம்

பால் விநியோகம் செய்யும் வாகன ஓட்டிகள் தயவு தாட்சண்யம் பாராமல், நடைபாதையில் பால் பாக்கெட்டுகளை கொட்டிச் செல்வதற்கு ஆவின் நிறுவனத்தின் நிர்வாகச் சீர்கேடுதான் காரணம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

8. அட்லீ - ஷாருக்கான் படத்திலிருந்து விலகினாரா நயன்தாரா?

ஷாருக்கான் - நயன்தாரா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லீக்காகியுள்ளது.

9. 'போலா சங்கர்' சிரஞ்சீவியுடன் மீண்டும் இணைந்த தமன்னா!

'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கான 'போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

10. 'ஸ்குவிட் கேம்' இரண்டாம் பாகம் வருவது நிச்சயம் - இயக்குநர் அறிவிப்பு!

'ஸ்குவிட் கேம்' வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் குறித்து திட்டமிட்டு வருவதாக அதன் இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹியூக் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.