ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top ten news at 9 am  top ten  top news  latest news  tamil nadu news  top ten news  tamilnadu latest news  today news  morning news  முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்  காலை செய்திகள்  செய்திச் சுருக்கம்  காலை 9 மணி செய்திகள்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 29, 2021, 9:02 AM IST

1. 'ஆளும் கட்சியினரால் உயிருக்கு ஆபத்து'- வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்!

குத்தாலம் ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் ஆளும் கட்சியினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறி தனக்கு விடுப்பு அளிக்குப்படி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்காதது குறித்து வழக்கு - ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

கரோனா ஊரடங்கு காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்படாதது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்தப்போவதில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4. குயின்ஸ் லேண்ட் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுத்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

5. தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர் - துப்பாக்கி குண்டுகளை தேடும் காவல் துறை

தூத்துக்குடியில் ரவுடி துரைமுருகன் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினர் நான்கு துப்பாக்கி குண்டுகளை தேடி வருகின்றனர்.

6. பாமக பிரமுகர் கொலை வழக்கு - சிபிஐ விசாரணை செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக மாவட்ட செயலாளர் தேவமணி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

7. பாலியல் தொல்லை வழக்கு: எதிர் தரப்புக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மதுரை மாநகராட்சி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டில் வழக்கில் சிக்கிய ஆசிரியருக்கு ஆதரவாக பாதிக்கபட்ட மாணவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

8. இந்திய எல்லைக்குள் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன்

பாஞ்சாப்பில் பாகிஸ்தானை சேர்ந்த ட்ரோன் விமானம் ஒன்று நுழைந்ததை அடுத்து, எல்லை பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்த முயன்றனர்.

9. இந்தியாவிலேயே மிகப் பெரிய ஸ்ரீ ராகவேந்திரர் சிலை..! ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் மிகப்பெரிய ஸ்ரீ ராகவேந்திரர் சிலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்

10. T20 WORLDCUP: ஃபார்முக்கு திரும்பிய வார்னர்; செய்கையை தொடரும் ஆஸ்திரேலியா!

இலங்கைக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இது சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது வெற்றியாகும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.