லால்குடியில் இருந்து திருமழபாடிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து கடைசி நடையாக திருமழபாடிக்கு இரவு 10.30 மணிக்கு மேல் வந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு அதிகாலையில் 6.30 மணிக்கு மீண்டும் இயக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்றிரவு ஓட்டுநர் செந்தில் குமார் மற்றும் நடத்துநர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பேருந்தை திருமழபாடி கால்நடை மருத்துவமனை அருகே நிறுத்திவிட்டு கால்நடை மருத்துவமனையில் படுத்து உறங்கியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும், அரசுப் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து, திருமானூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அமைச்சரை அருகில் வைத்தே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் பேசிய கருணாஸ்