ETV Bharat / state

வரப்போகுது புரட்டாசி மாதம்: கறிக்கடைகளில் குவிந்த பொதுமக்கள்! - The Upcoming Poratashi

அரியலூர்: புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளதால் மீன், கறிக்கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

கறிக்கடை
author img

By

Published : Sep 15, 2019, 5:19 PM IST

புரட்டாசி மாதம் வரும் புதன்கிழமை தொடங்க உள்ளது. இந்த மாதம் வைணவக் கடவுளான பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பலர் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளையே விரும்பி உண்ணுவர். மேலும் இந்த மாதத்தில் பலர் விரதம் இருப்பதாலும் அசைவ உணவுகள் தவிர்ப்பது வழக்கம். இந்நிலையில் இன்று ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்குத் தேவையான அசைவ உணவுப்பொருட்களை வாங்கிச் சென்றனர். குறிப்பாக கறிக்கடை, மீன்மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது.

கறி மற்றும் மீன்கடைகளில் அலைமோதிய மக்களின் கூட்டம்

மேலும் காய்கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டதால், வியாபாரிகள் கலக்கமடைந்தனர். கூட்டம் அதிகரிப்பு காரணமாக மீன் வகைகளில் சிலவற்றின் விலை சற்று அதிகமாக விற்கப்பட்டது. குறிப்பாக ஆட்டுக்கறி கிலோ ரூ.650க்கும்,கோழிக்கறி ரூ.130க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Intro:அரியலூர் - புரட்டாசி மாதம் ஆரம்பிக்க உள்ள நிலையில் ஆடு,கோழி,மீன்,நண்டு கடைகளில் அலைமோதும் அசைய பிரியர்கள்Body:புரட்டாசி மாதத்தில் வரும் புதன் கிழமை ஆரம்பிக்க உள்ள நிலையில் இது பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் தமிழகத்தில் அசைவம் சாப்பிடாமல் இருப்பது பெரும்பான்மை மக்களின் வழக்கமாகும்.

அரியலூரில் ஆட்டுக்கறி, கோழி, மீன் கடை ,நண்டு கடை ஆகியவற்றில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கறிகளை வாங்கி செல்கின்றனர்.

இன்று ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்களுக்கு பிடித்த அசைவங்களை சுத்தம் செய்தற்க்கு நேரம் ஆனாலும் கடைகளில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் காய்கறி கடைகளை விட கறி கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.

கூட்டம் அதிகரித்த சூழ்நிலையில் மீனில் சில வகைகளின் சிறிது விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற கறிகளின் விலை அதே விலையில் விற்கப்படுகிறது.

.Conclusion:குறிப்பாக ஆட்டுக்கறி கிலோ 650 க்கும், கோழி பிராய்லர் 130க்கும் ,நாட்டுக்கோழி 320 கற்கும் விற்பனை செய்யப்படுகிறது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.