அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகின்றது.
இப்பணியானது இம்மாத இறுதிக்குள் முடித்துவிட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால், ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான புத்தகங்களை அனுப்பிவருவதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார். அதுபோல பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கப்படும்.
இதையும் படிங்க: 'பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் நிலை?' - பதில் சொல்ல மறுத்த அமைச்சர்!