ETV Bharat / state

நிலத்திற்காக மாமனாரை கொலை செய்த மருமகள் கைது! - காவல்துறை விசாரணை

அரியலூர்: காவிரிப்பாலையம் அருகே நிலத்தை தனது பெயரில் பட்டா போட மறுத்த மாமனாரை, மருமகள் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The daughter-in-law who murdered her father-in-law for the land

author img

By

Published : Jul 7, 2020, 8:19 PM IST

அரியலூர் மாவட்டம் காவிரி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ராமலிங்கம் கடந்த 2010ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால் அவரின் மனைவி ராணிக்கு இரண்டரை ஏக்கர் நிலத்தை தங்கசாமி பாகம் பிரித்துக் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் ராணிக்கு வழங்கிய நிலத்தை அவரது பெயரில் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி அடிக்கடி மாமனாரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து இன்று தங்கசாமிக்கும், ராணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராணி அருகிலிருந்த கட்டையை எடுத்து மாமனாரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தங்கசாமி, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த செந்துறை காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்திற்காக மருமகளே, மாமனாரை கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.