அரியலூர்
அரியலூர் மாவட்டம் வீனா கைகாட்டி மகாசக்தி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று பால்குட திருவிழா நடைபெறும்.
அதன் ஒரு பகுதியாக வீனா கைகாட்டி ரெட்டிபாளையம் சுற்றுவட்டார கிராம மக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், காவடி, தீச்சட்டி, அலகு குத்துதல், பாடை கட்டி வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்,
இதேபோல் அரியலூர் பாலதண்டாயுதபாணி கோயில், கல்லங்குறிச்சி குறை தீர்க்கும் குமரன் ஆலயம் ஆகிய கோயில்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
பெரம்பலூர்
ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
அருள்மிகு சோமாஸ்கந்தர், பிரியாவிடை அம்மன், வள்ளி, தெய்வானை ஒரு தேரிலும் அருள்மிகு காமாட்சியம்மன் மற்றொரு தேரிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர், தொடர்ந்து பக்தர்கள் பக்தி முழக்கத்தோடு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே செவிடன்காடு கிராமத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கூத்தங்குடி, பெருங்காடு, அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், நாகுடி போன்ற பகுதியிலிருந்து ஏராளமான வழுக்கு மரம் ஏறும் வீரர்கள் கலந்துகொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர். வெற்றப்பெற்ற அணியினருக்கு வழுக்கு மரத்தில் மேல் உள்ள அனைத்து பொருட்களும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இதையும் படிக்க: கோலாகலமாக நடந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தேர்த் திருவிழா!