அரியலூர் அருகே பள்ளி மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும், பல மாணவிகளிடமும், பயிற்சி ஆசிரியைகளிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் நேற்று (நவ.24) பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரியலூர் காவல்துறையினர் பள்ளி ஆசிரியரை காவல்நிலையம் அழைத்து சென்று பள்ளியில் யார், யாரிடம் பாலியல் ரீதியான தொந்தரவில் ஈடுபட்டார் என்பதனை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் வெளியே சொல்லக்கூடாது எனவும், ஆசியருக்கு உடந்தையாக மாணவியை சமாதான படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாலியலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் மற்றும் மாணவிகளின் புகாரை மறைக்க முயற்சி செய்த பள்ளி தலைமை ஆசிரியை உள்ளிட்ட இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அரியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தலைமைக் காவலர் மீது வழக்குப்பதிவு