ETV Bharat / state

லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு! - அரியலூர் பசுபதீஸ்வரர் கோவில் லிங்கம் மீது சூரிய ஒளி

அரியலூர்: ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

god
god
author img

By

Published : Apr 21, 2020, 10:28 AM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 5ஆம் தேதிமுதல் 10ஆம் தேதிவரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். சித்திரை மாதம் தமிழ் மாதத்தின் தொடக்கம் என்பதால்‌ இம்மாதத்தில் சூரியபகவான் ஈசனை வழிபடுவதாக ஐதீகம்.

லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு!

அதன்படி இன்று காலை சூரிய உதயத்தின்போது அதிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரடியாக லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த நிகழ்வு சித்திரை 10ஆம் தேதிவரை நீடிக்கும் என்று கோயில் வழிபாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

லிங்கத்தின்மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சியின்போது சூரிய ஒளியோடு இறைவனைத் தரிசிப்பது அபூர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வருடத்தில் இரண்டு மாதங்களில் இந்த நிகழ்வு நடைபெறும்.

தற்போது 144 தடை உத்தரவு தொடர்வதால் பொதுமக்கள் யாரும் கோயிலுக்கு லிங்கத்தை தரிசிக்க வரவில்லை. இருப்பினும் ஒருசிலர் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: நேரலையில் மீனாட்சி திருக்கல்யாணம் ஒளிபரப்பாகும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.