அரியலூர் ஒன்றியத்தில் 120 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள், அரசு நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 300 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் அம்மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் வங்கிக் கடன், குடும்ப அத்தியவாசிய செலவுகளுக்கு பணம் இல்லாமல் ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பெரும்பாலான பணியிடங்கள் காலியாக உள்ளதால் சம்பளம் குறித்த தகவல்கள் கருவூலத்திற்கு அனுப்பாததால், சம்பளம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பி ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டபோது இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.