தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (நவ.11) காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிபேட்டை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
'ரெட் அலர்ட்’ என்றால் என்ன..?(Red Alert)
வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது. மேலும் 24 மணி நேரத்தில் 20 செ.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் பட்சத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்படும். மக்களின் இயல்பு நிலையை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விடுக்கப்படும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கும்.
போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கும் மழை தொடர்பான எச்சரிக்கைகளிலேயே மிக அபாயகரமானது ரெட் அலர்ட் என்னும் சிவப்பு எச்சரிக்கை ஆகும்.