சுண்ணாம்புக்கல் நிறைந்த மாவட்டமாக அரியலூர் உள்ளதால் பொதுமக்களுக்கு சிறுநீரகத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற வேண்டிய அவலநிலை உள்ளது. இதையடுத்து, கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது.
அதன்படி வடக்கு தாமரைக் குளம், தெற்கு தாமரைக் குளம், வெங்கட் ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 24 லட்சம் ரூபாய் செலவில் மூன்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இவற்றை தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் திறந்துவைத்தனர். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம்குமார், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.