கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் நகருக்கு வந்தால் போதும் என்று காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
இருப்பினும் இதனை மீறி ஒரு சிலர் வெளியே சுற்றி திரிகின்றனர். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் தேரடி அருகே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை செருப்பில்லாமல் வெறும் காலில் சாலையில் நிற்க வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
உச்சி வெய்யில் மண்டையை பிளக்கும் சூடு தாங்க முடியாமல் சாலையில் நின்ற இளைஞர்கள் ஒரு காலை தூக்கியும், மறு காலை தரையில் வைத்தபடியும் தடுமாறினர். இதனையடுத்து அவர்களை மீண்டும் செருப்பை அணிய செய்த காவல்துறையினர், கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தினர்.
பின்னர் 144 தடை உத்தரவு இன்னும் முடியவில்லை, 14ம்தேதிவரை தொடர்கிறது. எனவே தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஃபீனிக்ஸ் மால் ஊழியர்களுக்கு கரோனா- அதிர்ச்சியில் சென்னை மக்கள்!