ETV Bharat / state

அரியலூர் மாவட்டத்தில் கரோனா - காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

அரியலூர்: சென்னையில் இருந்து வந்த பெண்ணிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

police
police
author img

By

Published : Mar 28, 2020, 8:19 PM IST

அரியலூர் மாவட்டத்தில் முதல் முறையாக சென்னையில் இருந்து வந்த இளம்பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர், மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் உலா வரும் இளைஞர்களை தடுத்து நிறுத்தி கண்டிப்பதோடு வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இவர்களுடன் வருவாய்த் துறை, வளர்ச்சித் துறை, ஊரக உள்ளாட்சித் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் உணவின்றி தவித்து வந்தார். இதைக்கண்ட தாசில்தார் முத்துகிருஷ்ணன் அந்த மூதாட்டிக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி உபசரித்தார். இதைத் தொடர்ந்து, மூதாட்டியை பற்றி தகவல் பெற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அரியலூரில் பாதுகாப்பில் ஈடுபடும் காவல்துறை

மேலும், பொதுமக்கள் தங்களையும், மற்றவர்களையும் காக்க வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.