அரியலூர் மாவட்டம் திருமானூர், தா. பழூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் காவரி உபரி நீர் பாசனத்தை கொண்டு நெல் நடவு தொடங்கியுள்ளனர். இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகின்றன.
மேலும், திருமழபாடி, கரவெட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. இவைகளை விரைவில் தூர்வாரினால் மேலும் பாசனத்திற்கு உதவியாக இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், நடவு பணி தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இதையும் படிங்க: அமோக விளைச்சல் அடைந்த கொடைக்கானல் மலை நெல்லிக்காய்!