கரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்ட அரசு தற்போது ஊரடங்கில் தளர்வுகளைக் கொண்டுவந்ததோடு, பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன.
ஆனால் பொதுமக்கள் இவற்றைப் பொருட்படுத்தாமல், முகக்கவசம் அணியாமல் வெளியே வருவதால் நோய்த்தொற்று அதிகம் ஏற்பட்டுவருகிறது.
இதனை அடுத்து அரியலூர் நகராட்சி ஆணையர், துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் அரியலூர் நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் நடத்துநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல ஆட்டோவில் பயணம் செய்தவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: சாலையில் மல்லாக்க படுத்து மாஸ்காட்டிய மதுப்பிரியர்!