ETV Bharat / state

அரியலூரில் 42 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..!

Tamil Nadu Transport Minister Sivasankar: அரியலூரில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 42 நபர்களுக்குப் பணி ஆணையினை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கியுள்ளார்.

அரியலூர்
அரியலூர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 5:09 PM IST

அரியலூரில் 42 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்.. !

அரியலூர்: சமீப காலமாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பணிமனையில் புதிய பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று, 42 நபர்களுக்குப் பணி ஆணையினை வழங்கினார்.

திருச்சி, கரூர், கும்பகோணம், புதுக்கோட்டை, காரைக்குடி, நாகப்பட்டினம் ஆகிய மண்டலங்களில் பணியாற்றும் போது இறந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் 42 நபர்களுக்குப் பணி நியமன ஆணையினை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

மேலும், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து, திருச்சிக்கு இடை நில்லா பேருந்து (1-1) சேவையும் தொடங்கப்பட்டது. அதேபோல், பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்குக் குளிர்சாதன ஓய்வு அறையும் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மற்றும் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம்; அவையில் எதிர்கட்சிகள் கடும் அமளி.. உள்துறை அமைச்சரிடம் அறிக்கை கேட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.