தமிழ்நாடு முழுவதும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரசு தலைமை கொறடா, தாமரை ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்த சூழல் மாறி தற்போது அதிமுக ஆட்சியில் மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் கொடுக்கும் நிலைமை உள்ளது. திமுக என்றாலே பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதுதான். அது அவர்களுக்கு கைவந்த கலை. எனவே பொதுமக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்தி ஏமாந்தது போல் இனியும் ஏமாறாமல் எப்பொழுதும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: மீனவர்களின் வாழ்க்கையை அறிய நடுக்கடலுக்கு பயணித்த பள்ளி மாணவர்கள்!