ETV Bharat / state

அரியலூரில் ஒரு மணிவரை மட்டுமே செயல்படும் மருந்தகங்கள்...! - medical shops closed

அரியலூர் மாவட்டத்தில் மதியம் 1 மணிவரை மட்டுமே மருந்தகங்கள் செயல்படும் என்று அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மதியம் ஒரு மணிவரை மட்டுமே மருந்தகங்கள் செயல்படும்

author img

By

Published : Apr 12, 2020, 3:43 PM IST

கரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பொதுமக்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு அத்தியாவசிய தேவைகளை வாங்க வருவதற்கான நேரத்தை காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை என்று குறைத்து அறிவித்துள்ளது. ஆனால் மருந்தகங்கள் முழுநேரமும் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையியில் அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் வியாழக்கிழமை முதல் காலை 8 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை மட்டுமே மருந்து கடைகள் செயல்படும் என்று அறிவித்தது.

எனவே மருந்து மாத்திரைகள் வாங்கிச்செல்வோர் மதியம் 1 மணிக்குள் வந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் மருந்து வாங்கச் செல்கிறோம் எனக்கூறி பொதுமக்கள் பொதுவெளியில் இயல்புநிலை போல் நடமாடி வருவதால், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் மதியம் 1 மணிவரை என்ற கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. இதனையடுத்து அனைத்து மருந்து கடைகளும் மதியம் ஒரு மணிக்கு அடைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு கை கொடுத்த தமிழ்நாடு அரசு: மகிழ்ச்சியில் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.