ETV Bharat / state

'சோசியல் மீடியாவில் வளர்ந்த காதல்' - நாடுவிட்டு நாடு வந்து காதலனை கரம்பிடித்த இளம்பெண்!

சமூக வலைதளத்தில் மலர்ந்த காதலினால், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணும் சிங்கப்பூரில் பணியாற்றிய அரியலூரைச் சேர்ந்த இளைஞரும் நமது தமிழ்நாட்டில் பெரியார் வழி திருமணம் செய்துகொண்டது அனைவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 8, 2023, 10:29 PM IST

அரியலூர்: 'காதல்' என்ற மூன்றெழுத்து மந்திரம் மனிதர்களை மட்டுமல்ல... உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் கட்டிப்போடும் வசியம் கொண்டது. காதலைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை. பேசாத பேச்சாளர்கள் இல்லை. அம்பிகாவதி - அமராவதி (Ambikapathy - Amaravathi), ரோமியோ -ஜூலியட்(Romeo-Juliet), லைலா-மஜ்னு (Laila-Majnu) என்று அமர காதல் வரிசையில் பல காதல் ஸ்டோரிகளை நாம் படித்திருக்கிறோம்.

ஒருதலை ராகம் போன்ற ஒருதலை காதல் விவகாரங்களையும், பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல், போன்ற படங்களையும் கண்டு ரசித்திருக்கிறோம். ஆனால், இணையத்திலேயே மலர்ந்த காதல் இல்லறத்தில் சேர்ந்த நிகழ்வு அரியலூர் மாவட்டத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். பொறியியல் பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் வெல்ஜூலின். வேளாண் பட்டதாரியான இவர், நெதர்லாந்து நாட்டில் வேளாண் பண்ணையத்தில் வேலை பார்த்து வருகிறார். இணையம் வழியாக இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக சாட்டிங்கில் பேசத் தொடங்கிய இவர்கள் நாளடைவில் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தனர்.

ஒரு வழியாக நேரில் சந்தித்த காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். காதலன் விக்னேஷின் தந்தை, பெரியார் கொள்கையில் (Periyarism) தீவிர பற்று உடையவர் என்பதால் பெரியார் வழி திருமணம் தான் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

மாற்று மதத்தைச் சேர்ந்த வெல்ஜோலின் இதற்கு சம்மதம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்ட படியே இந்தியா வந்தனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் என்ற இடத்தில் அண்ணா-பெரியார் கலையரங்கம் என்ற கலையரங்கத்தில் இவ்விருவரின் திருமணமும் படுஜோராக இன்று (ஜன.8) நடைபெற்றது.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமை வகித்து 'இருமனம் இணையும் திருமண இணை ஏற்பு உறுதி' மொழியை வாசித்து திருமணத்தை நடத்தி வைத்தார். முழுக்க முழுக்க தமிழ் பண்பாடு முறைப்படி பெரியார் கொள்கை ரீதியில் பெரியவர்கள் அட்சதைத் தூவ இல்லற இணை ஏற்பு விழா மிக மிக சிறப்பாக நடந்தேறியது.

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ கண்ணன் மற்றும் திராவிடர் கழக மூத்த நிர்வாகிகள் இருதரப்பு உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர். நாடு விட்டு நாடு வந்து காதலனை துணிச்சலாக கரம்பிடித்த வெல்ஜோலினுக்கு மண விழாவுக்கு வந்த அனைவரும் வெகுவாக வாழ்த்தினர்.

இதையும் படிங்க: 'மண் பானை செய்யும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்' - தொழிலாளர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.