அரியலூர் மாவட்டம் குறிஞ்சான்குளம் தெருவைச் சேர்ந்தவர் துணி வியாபாரி மாணிக்கம். சென்ற 2018ஆம் ஆண்டு தனக்கும் தனது அக்கா ராணிக்கும் வீடு கட்ட முடிவு செய்து பிரதம மந்திரி நகர்புற வீட்டு வசதிக்கு இரண்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
பின்னர் அலுவலர்கள் வீட்டிற்கு புகைப்படம் எடுக்க வந்துள்ளனர். அப்போது பேஸ்மட்டம் போட பணம் இல்லை எனக் கூறி வீடு வேண்டாம் என கூறியுள்ளார்.
அதன் பிறகு சென்ற 2019ஆம் ஆண்டு எட்டாம் தேதி மாணிக்கம், அவரது அக்கா ராணி பெயருக்கு டெல்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்து வீடு கட்டியதற்க்கு நன்றி, வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு சமுதாயத்தில் மதிப்புடன் வாழ வேண்டும் என வாழ்த்து கடிதம் வந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணிக்கம் கரோனா ஊரடங்கு என்பதால் வெளியே யாரிடமும் கூறாமல் கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளார். தற்போது தங்களது பெயரில் வேறு யாரேனும் வீடு கட்டியுள்ளார்களா? என சந்தேகப்பட்ட மாணிக்கம் மாவட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
இதற்கு அலுவலர்கள் கடிதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிசான் திட்ட முறைகேடு: பாஜக பிரமுகர் கைது