ETV Bharat / state

மாதத்திற்கு ஒன்றேமுக்கால் லட்சம் ரூபாய் வீணாக்கும் நீதிமன்றங்கள் - அரியலூர் நீதிமன்ற செய்திகள்

அரியலூர்: தனியார் கட்டடங்களில் செயல்படும் நீதிமன்றங்களால் மாதத்திற்கு ஒன்றேமுக்கால் லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

large-amount-of-government-money-spend-for-court-rent-in-ariyalur-district
large-amount-of-government-money-spend-for-court-rent-in-ariyalur-district
author img

By

Published : Feb 6, 2020, 5:19 PM IST

அரியலூர் மாவட்டம் பெரம்பலூரிலிருந்து பிரிக்கப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்திற்கென தனித்தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அரியலூரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆறு நீதிமன்றங்களும், தனியார் கட்டடங்களில் மூன்று நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.

தனியார் கட்டடங்களில் செயல்பட்டுவரும் விரைவு மகளிர் நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றங்களின் வாடகைக்காக மட்டும் அரசு மாதம் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 400 ரூபாய் செலவழித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, இந்த மூன்று நீதிமன்றங்களும் வெவ்வேறு திசைகளில் அமைந்துள்ளதால், பொதுமக்களும், வழக்கறிஞர்களும் நீதிமன்றங்களுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.

இந்த இடர்பாடுகளை களைய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கக்கோரி கடந்த ஒருமாத காலமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் இதுகுறித்து எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளன.

மூன்று கட்டடங்களுக்கும் ஒரு வருடத்திற்கு கொடுக்கும் வாடகை பணத்தில் ஒரு புதிய நீதிமன்றத்தையே கட்டிவிடலாம் என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாதத்திற்கு லட்சத்தை வீணாக்கும் அரியலூர் நீதிமன்றங்கள்

மேலும், தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து காலியாக உள்ள பல்துறை வளாகத்தில் மூன்று நீதிமன்றங்களையும் செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:கனிமொழி தேர்தல் வெற்றி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

Intro:அரியலூர் மாதத்திற்கு ஒரு லட்சத்து எழுபத்தி நான்கு ரூபாய் அரசு பணம் மீனாகும் அவலம்

Body:அரியலூர் மாவட்டம் உருவாகி 14 ஆண்டுகள் ஆகிறது மாவட்ட நீதிமன்றங்கள் உருவாகியே 10 ஆண்டு ஆகிறது அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சுமார் 6 நீதிமன்றங்கள் அமைந்துள்ளன மேலும் இடப் பற்றாக்குறையால் விரைவு மகளிர் நீதிமன்றம் அரியலூர் கல்லூரி சாலையில் எங்க வருகிறது குடும்ப நல நீதிமன்றம் அரியலூர் பெருமாள் கோயில் தெருவில் இயங்கி வருகிறது தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அரியலூர் அண்ணா சிலைக்கு அருகே வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன அறிவு மகளிர் நீதிமன்றத்திற்கு மாதத்திற்கு வாடகையாக ரூபாய் 66 ஆயிரத்து 450 ரூபாயும் குடும்ப நல நீதிமன்றத்துக்கு 89 ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது ரூபாயும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வாடகை பதினெட்டாயிரம் என மாதத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 400 ரூபாய் செலவாகிறது வருடத்திற்கு 20 லட்சத்து 92 ஆயிரத்து 800 ரூபாய் அரசு பணம் செலவிடப்படுகிறது மேலும் இம்மூன்று நீதிமன்றங்களும் ஒவ்வொரு திசையில் அமைந்துள்ளது இதனால் பொதுமக்களும் வழக்கறிஞர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கக்கோரி வழக்கறிஞர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகின்றனர் ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இதுகுறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது வருடத்திற்கு கொடுக்கும் வாடகை வைத்து இந்த மூன்று நீதிமன்றங்களும் கட்டி முடித்து விடலாம் எனவும் வாடகைக்கு என வீணாக செலவாகும் பணத்தை வைத்து வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்

Conclusion:எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இம்மூன்று நீதிமன்ற கட்டிடங்களையும் காலியாக உள்ள பல்துறை வளாகத்தில் செயல்படுத்தினால் அரசிற்கு வாடகை செலவில்லாமல் அமையும் என்பதே அனைத்து மக்களின் விருப்பமாக உள்ளது இடிவி செய்திகளுக்காக அரியலூரில் இருந்து பாலாஜி நா
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.