அரியலூர் பேருந்து நிலையம் அருகே உழைக்கும் பெண் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவேண்டும், உழைக்கும் பெண்களுக்கு ஆண்களுக்கு வழங்குவது போல் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: 'மகளிர் தின வாழ்த்துகள்' கூறிய முதலமைச்சர் பழனிசாமி!