ETV Bharat / state

காடுவெட்டி குருவின் மகனுக்கு அரிவாள் வெட்டு! - பாமக செய்திகள்

அரியலூர்: மறைந்த காடுவெட்டி குருவின் மகன், மருமகன் உள்ளிட்டோர் அரிவாளால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

kaduvetti-gurus-son
kaduvetti-gurus-son
author img

By

Published : May 27, 2020, 9:02 AM IST

Updated : May 27, 2020, 11:04 AM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் பாமக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான மறைந்த ஜெ. குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் ஆதரவாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை, காடுவெட்டி ஊராட்சி மன்றத் தலைவரும், பாமக பிரமுகருமான சின்னபிள்ளை, அவரது சகோதரர் காமராஜ் ஆகியோர் பிடித்துவைத்துள்ளனர்.

அதனால் இருசக்கர வாகனம் குறித்து காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் சின்னபிள்ளை, காமராஜிடம் கேட்கச் சென்றுள்ளனர். பேச்சுவார்த்தையின்போது காமராஜின் மகன் சதீஷுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் கனலரசன், மனோஜ், மதன் ஆகியோர் அரிவாளால் தாக்கப்பட்டுள்ளனர்.

அதில் காயமடைந்த மூவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இது குறித்து குருவின் தாயார் கல்யாணி, "பாமக தலைவர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் தூண்டுதலின்பேரில்தான் தாக்குதல் நடைபெற்றுள்ளது" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: நகராட்சி ஊழியரை வெட்டிய பாமக பிரமுகர் கைது - நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Last Updated : May 27, 2020, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.