அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பல்வேறு பிரச்னைகளை எடுத்து வைத்தனர். அதிலும், குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்றும், சிமெண்ட் ஆலைகள் அமைத்துள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கங்களினால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அரியலூர் மாவட்டத்தில் முற்றிலுமாக விவசாயமே அழிந்துவிடும் என வலியுறுத்தி பேசினர். மேலும், அரியலூர் ஒருங்கிணைந்த டெல்டா பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.