தமிழ்நாட்டில் 104 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்கனூர் கிராமத்து விவசாயிகள் கையில் தாலியை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கு தாலி எந்தளவு முக்கியமோ, அதேபோல் விவசாயிகளுக்கு மண் முக்கியம் எனவும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் செய்ய முடியாத நிலை எற்படும் என்றுக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது, மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் அரியலூர் மாவட்டம் பாலைவனமாக மாறும் எனவும் எச்சரித்தனர்.