அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொங்குநாட்டார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக பெய்த மழையில் இவர் வீட்டின் சுவர் ஈரமாக இருந்துவந்தது. இந்நிலையில், இவரது மாமியார் அஞ்சம்மாள் (73), ராஜகோபாலின் வீட்டிற்கு நேற்று மதியம் வந்துள்ளார்.
அப்போது ஈரமாக காணப்பட்ட வீட்டின் சுவர் இடிந்து அஞ்சம்மாள் மீது விழுந்தது. இதையடுத்து, அவரை உயிருக்கு ஆபத்தான நிலைமையில் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ஆவடியில் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு!