அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் 25 ஏக்கர் சமவெளியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட ஏரியின் கரை, கடந்த மாதம் புதிதாக அமைக்கப்பட்டது. இதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என விவசாயிகள் அப்போதே கோரிக்கைவிடுத்தனர்.
பின்னர் செய்து தருவதாகக் கூறிய அலுவலர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால், அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்தபோது ஏரிக்கு அருகிலுள்ள 80 ஏக்கர் விளைநிலத்தில் நீர் நிரம்பியது. தண்ணீரில் மூழ்கிய நெல் நாற்றுகள் அழுகிவிடும் சூழ்நிலையில் உள்ளது. இதன் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உயர்மின்னழுத்த கோபுரங்களுக்கு வாடகை கேட்டு விவசாயிகள் போராட்டம்!