ETV Bharat / state

'மீதியிருக்கிற கரும்பைத் தா... இல்லையேல் 33 ரூபாய் வீதம் பணத்தை கட்டு'; கதிகலங்கும் ஊழியர்கள் - அரியலூர்

பொங்கல் தொகுப்பில் வழங்கியது போக ரேஷன் கடைகளில் மீதமிருக்கும் கரும்புகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் அல்லது கரும்புக்கு ரூ.33 வீதம் ஒப்படைக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவால் ரேஷன் கடை ஊழியர்கள் கதிகலங்கியுள்ளனர்.

பொங்கல் தொகுப்பு கரும்பு அல்லது ரூ.33 திரும்ப ஒப்படைக்க அரசு அழுத்தம்; கதிகலங்கும் ஊழியர்கள்

author img

By

Published : Jan 24, 2023, 5:49 PM IST

அரியலூர்: ரேஷன் கடைகளில் மீதமுள்ள கரும்புகளை அந்தந்த மாவட்ட அளவிலான குடோன்களில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் ரேஷன் கடை ஊழியர்கள் உச்சகட்ட கிலியில் உள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது ஜன.,9ம் தேதி துவங்கி நடைபெற்றது. பரிசுத் தொகுப்பை பொங்கலுக்குள் பெற்றுக் கொள்ளாத ரேஷன் அட்டைதாரர்கள் அதன் பின்னர் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக ஆறடி உயரம் கொண்ட முழுக் கரும்புகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அறிவுரை வழங்கி இருந்தது.

அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டத்தில் செங்கரும்பு பயிரிட்டு இருந்த விவசாயிகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நேரடியாக சந்தித்து, கரும்பை ஆய்வு செய்து, கொள்முதல் செய்து கொண்டு வந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு முழுக்கரும்பை வழங்கினர்.

6 லட்சம் பேர் பொங்கல் தொகுப்பு வாங்கவில்லை: பொங்கல் கரும்பு கொள்முதலுக்கு மட்டும் அரசு 72 கோடியே 38 லட்சம் ரூபாயை நிதியாக ஒதுக்கீடு செய்தது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இந்த 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களும் முழுக் கரும்பை இலவசமாகப் பெற்று சென்றனர்.

ஆனால், தமிழ்நாடு முழுவதும் 6 லட்சம் பேர் இதுவரை பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளவில்லை. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும்கூட பரிசுத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தபோதும் பலர் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்ற சூழ்நிலைகள் காரணமாக 6 லட்சம் பேர் வரை பொங்கல் தொகுப்பை இதுவரை பெறாமல் உள்ளனர். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 20% பேர் இன்னும் பொங்கல் பரிசு பெறவில்லை.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக கூட்டுறவுத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவால் ரேஷன் கடை ஊழியர்கள் கதிகலங்கி நிற்கின்றனர். கூட்டுறவுத்துறை சார்பில் அந்தந்த மண்டலப்பதிவாளர்கள், இணை பதிவாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்று திடீரென்று அனுப்பப்பட்டது.

தலைசுற்ற வைத்த சுற்றறிக்கை: அந்த சுற்றறிக்கையில், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி அந்தந்த மாவட்டத்தில் எத்தனை சதவீதம் நிறைவு பெற்றுள்ளது? பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளாத ரேஷன் அட்டைதாரர்கள் விவரம் என்ன? எத்தனை சதவீதம் பேர் வாங்கி உள்ளனர்? எத்தனை சதவீதம் பேர் வாங்கவில்லை? வாங்காததற்கு காரணம் என்ன? இந்த விவரங்களை துறை தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

அதேபோல பொங்கல் பரிசு தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்பட்ட கரும்பு மீதம் எவ்வளவு அந்தந்த அங்காடிகளில் உள்ளது? அந்த கரும்புகளை உடனடியாக அந்தந்த மாவட்ட அளவில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை பார்த்த ரேஷன் கடை ஊழியர்கள் "கரும்புக்கு நான் எங்கய்யா போவேன்" என்று வடிவேலு பாணியில் புலம்பி வருகின்றனர். ரேஷன் கடைகளைப் பொறுத்தவரை பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட போது கரும்பு முறையாக அனைவருக்குமே கொள்முதல் செய்யப்பட்டது.

உதாரணமாக அரியலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் பணியும் நடந்தது. ஆனால் 20% பேர் பொங்கல் பரிசுத்தொகையினை பெற்றுக் கொள்ளவில்லை. இந்த கரும்புகள் மீதமாகி அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகை வரை இருந்தது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி ஜன., 9ம் தேதி தொடங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததால் 7-ம் தேதி கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு 8-ம் தேதி அந்தந்த ரேஷன் கடைகளுக்கு வந்துவிட்டன. ஏழாம் தேதி வயலில் இருந்து அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் 15ஆம் தேதி பொங்கல் வரை அந்தந்த ரேஷன் கடைகளில் இருந்தன.

செங்கரும்புகளைப் பொறுத்தவரை அறுவடை செய்த ஒரு வாரத்துக்குள் அதன் ஈரத்தன்மை குறைந்து கரும்பு காய்ந்து விடும். அதன் பிறகு அதை சாப்பிட இயலாது. வெறும் சக்கையாக இருக்கும். 14ஆம் தேதி போகி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் போதே கரும்புகள் வழங்கப்பட்டு விட்டன.

கரும்பெல்லாம் பங்கு போட்டாச்சு: மீதம் இருந்த கரும்புகளை 15ஆம் தேதி காலையில் பணிக்கு வந்த ரேஷன் கடை ஊழியர்கள், மேல் அதிகாரிகள், உயர் அதிகாரிகள், அப்போதைக்கு உதவிக்கு வந்த ஊழியர்கள் என எல்லோரும் பங்கு போட்டு எடுத்துச்சென்று விட்டனர். எனவே 15ஆம் தேதியோடு எந்த கடையிலும் கரும்பு இல்லை.

''இந்த நிலையில் மீதமுள்ள கரும்புகளை திருப்பி அனுப்புங்க....'' என்று அரசு உத்தரவு போட்டிருப்பதால் "கரும்புக்கு நான் எங்கய்யா போவேன்" என்று ஊழியர்கள் புலம்புகின்றனர். இது குறித்து ரேஷன் கடை பணியாளர்களிடம் விசாரித்த போது, ''உத்தரவு வந்திருப்பது உண்மைதான். புள்ளி விவரங்கள் கேட்பார்கள். அது வழக்கமான ஒன்றுதான். அதே நேரம் கரும்பை திருப்பி அனுப்பு என்றால், கரும்புக்கு நாங்கள் எங்கே போவோம்.

கரும்பு எத்தனை நாள் தாங்கும். ஏழாம் தேதி கொள்முதல் செய்த கரும்பு 24ஆம் தேதி வரை உயிரோடு இருக்குமா..? அதைச் சாப்பிட இயலுமா..? அந்த கரும்புகள் அனைத்தும் அப்போதே முடிந்து விட்டன. இந்த நிலையில் கரும்பை அனுப்புங்க, என்று சொன்னால் நாங்கள் என்ன செய்வோம்'' என்று வேதனையோடு தெரிவித்தனர்.

இதில் குறிப்பிட்ட அங்காடியில் எத்தனை சதவீதம் பேர் பொங்கல் பரிசுத்தொகை பெற்றுக் கொள்ளவில்லை என்ற புள்ளி விவரங்கள் அடிப்படையில் அத்தனை கரும்புகளுக்கான தொகையாக ஒரு கரும்புக்கு 33 ரூபாய் வீதம் அந்த ஊழியர்கள் தான் செலுத்த வேண்டும். இல்லை என்றால் கரும்பை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு கிடுக்கிப்பிடி போட்டு உள்ளதால் ஊழியர்கள் புதிதாக கரும்பை வாங்கி ஒப்படைக்கலாமா என்ற மனோபாவத்திற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'சேர் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?' திமுக நிர்வாகி மீது கல் வீசிய அமைச்சர் நாசர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.