ETV Bharat / state

ஊரடங்கு தளர்வு: தமிழ்நாட்டில் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கம்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்

கரோனா ஊரடங்கு உத்தரவில் கொண்டுவரப்பட்டுள்ள தளர்வு காரணமாக தமிழ்நாட்டில் இன்றுமுதல் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

curfew-relaxation-first-buses-in-tamil-nadu-today

author img

By

Published : Sep 1, 2020, 1:08 PM IST

Updated : Sep 1, 2020, 2:19 PM IST

தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு தளர்வு படிப்படியாக அமல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பொது போக்குவரத்து இயங்கும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

அரியலூர்: பேருந்துகளுக்கான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் பணிமனையிலிருந்து 175 பேருந்துகள் இன்றுமுதல் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டுவருகின்றன. மேலும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணியாளர்கள் என அனைவரும் கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: அரசின் அறிவிப்பையடுத்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், துறைமுகம், விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளுக்கும் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் பேருந்துகளில் குறைந்த அளவு பயணிகள் மட்டுமே பயணித்தனர்.

தருமபுரி: பேருந்துகளுக்கான தடை நீக்கப்பட்டதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 100 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. பின்னர் பயணிகளின் வருகையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவுசெய்யப்படும் எனப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு: இன்றுமுதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்படலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் பயணிகளின் வருகை குறைவாக இருந்த காரணத்தினால் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அரசு பேருந்துகளில் சோதனை பணிகள் தீவிரம்!

Last Updated : Sep 1, 2020, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.